Coffee 1. 5yr baby

Sisters my baby 1. 5 yr... Milk, complain la kudikka matra coffee'na kudikkura...

Coffee, tea nalladha kudikka vekkalama intha age la..

Milk'na oru vaay kuda kudikka matra... Enna panradhu.?

Msg me imma amma and indhu sis..
Milk bottle ha parthathum kathura ana milk, complan,boost la kudikka matra..
Coffee tea ha iruntha kudikra..
First milk, 2nd boost, 3rd complan try panni partha kudikkala..
Ippo Tea, coffee kodutha kudikkuranga enna panrathu athuvum intha age la bazhagam agudhu athan health problem ethavathu vanthudumonu bayama iruku..

I love my parents...

எனக்கு தெரிந்தது வரை சொல்கிறேன்.. டீ குடிக்கலாம்.. coffee வெளிநாட்டில் தடை விதித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன..
Horlicks, Boost, Complanல எந்த சத்துக்களும் கிடையாது.. சொல்ல போனால் அவைகள் எல்லாம் குடித்தால் குழந்தைக்கு மோஷன் டைட் ஆகும்..
சுத்தமான பசும்பால் கிடைத்தால் கொடுத்து வாருங்கள்..
பால் குடிக்காமல் இருப்பதால் எந்த பிரச்சினபிரச்சினையும் வராது.. அதற்கு சமமாக கால்சியம் நிறைந்த பழங்கள், பாதாம் கொடுத்து வாருங்கள்..
பாதாம் வறுத்து பவுடர் செய்து சிறிது ஏலக்காய் பவுடர் சேர்த்து பாலில் கலந்து கொடுத்து பாருங்கள்..
கால்சியம் நிறைந்த மற்ற உணவுகள் சேர்த்து வாருங்கள்..
வேறு வழி இல்லாத நிலையில் காபி பவுடர் கம்மியாக சேர்த்து கொடுத்து வாருங்கள்..
Horlicks,boost,complanகு பதிலாக வீட்டில் health mix செய்து பாலில் கலந்து கொடுக்கலாம்..

இவை எமக்கும் கூட அவசியமில்லை. பெரிதாக எந்த நன்மையும் இல்லை. பல் பழுப்பாகலாம்.
ஒன்றரை வயதாக்கிவிட்டது. திட ஆகாரம் கொடுப்பது போதும். பால் நல்லது, ஆனால் அதியாவசியம் இல்லை. சுவைக்காக காப்பி கலப்பதை விட நீங்க சொன்ன மீதி கெடுதல் குறைவு. மைலோ சேர்க்கலாம். ஏலம்... நினைக்கவே ஆசையாக இருக்கிறது. ;-) எதுவானாலும் கொஞ்சமாகச் சேருங்க.

‍- இமா க்றிஸ்

நாட்டு சர்க்கரை சேர்த்து வெறும் பால் கொடுத்து பாருங்கள்.. அது தேநீர் நிறத்தில் இருக்கும்.. என் மகளுக்கு தேநீர் என்று சொல்லி அதை கொடுப்பேன்..

:-) சூப்பர் ஐடியா! இன்னும் என்னென்ன சொல்லி ஏமாற்றுறீங்க! ;-)

‍- இமா க்றிஸ்

நேற்று மருத்துவமனைக் கையேடு ஒன்றில் படித்துத் தெரிந்துகொண்டது... தேநீர, உணவிலிருந்து இரும்புச் சத்து உறிஞ்சப்படுவதைக் குறைக்கும் என்கிறார்கள். கல்சியம் தேவைக்கு மேல் எடுப்பதுவும் இதே விதமாக இரும்புச் சத்து உறிஞ்சுதலைக் குறைக்குமாம். ஒரு வயதுக் குழந்தைக்கு ஒரு நாளைக்கு 500 மில்லிலீட்டர் (2 கப்) பால் போதும். சிறந்த பானம் நீர் என்கிறார்கள்.

‍- இமா க்றிஸ்

குழந்தைக்கு தேநீர் கொடுக்கிறத பற்றி சொல்லியிருக்கீங்க அது புரியல. கொஞ்சம் புரியிர மாதிரி சொல்ல முடியுமா

- பிரேமா

கொடுக்கிறதைப் பற்றிச் சொல்லவில்லை; கொடுக்காமலிருப்பதைப் பற்றிச் சொல்கிறேன்.

திவ்யாவும் இந்துவும் ஒன்றரை வயது குழந்தைக்கு தேநீர் கொடுப்பது பற்றியும் இந்த இழையில் பேசி இருந்தார்கள். இந்து சொன்ன, 'குடிக்கலாம்' என்பதை, 'கொடுக்கலாம்' என்று எடுத்தேன். ஏன் கொடுக்கக் கூடாது என்கிற விளக்கம் கொடுத்தேன்.

என் பேத்திக்காக மருத்துவர்கள் கொடுத்த கைநூலில் இருந்த விபரம் அது. தேநீரும் கால்சியமும், குழந்தை உண்ணும் ஏனைய உணவுகளில் இருந்து இரும்புச் சத்தை உடல் உறிஞ்சும் செயற்பாட்டை குறைக்க வல்லன என்கிறார்கள். ஒன்றரை வயதுக் குழந்தைக்கு ஒரு நாளுக்கு இரண்டு கோப்பை பால் போதும். அதற்கு மேல் வேண்டியதில்லை. தேநீர் எதிர்மாறான விளைவைக் கொடுக்கும். அதனால் கொடுக்கவே வேண்டாம் என்கிறேன்..

‍- இமா க்றிஸ்

எனக்கு நீங்கள் கொடுக்க கூடாது என்று சொன்னது புரிந்தது..
ஆனால் விளக்கம் இப்போது தான் தெளிவாக புரிந்தது..
நன்றி பிரேமா..
நன்றி இமாம்மா எங்களுக்கு ஒரு தெளிவான பயனுள்ள தகவல் சொல்லியிருக்கிறீர்கள்..

மேலும் சில பதிவுகள்