வேலூர் மீன் குழம்பு

தேதி: March 10, 2007

பரிமாறும் அளவு: 4 பேர்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மீன் (தேங்காய் பாறை, கொடுவா, வஞ்சிரம், வாவல்,
சங்கரா, ஐலா, சுதும்பு, அல்லது வறால்) - 1/4 கிலோ
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 2
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
தனியாத் தூள் - 4 தேக்கரண்டி.
தேங்காய் துருவியது - 3 தேக்கரண்டி.
புளி - எலுமிச்சை அளவு.
எண்ணெய் - 50 மில்லி.
தாளிக்க:
வடகம் (அல்லது) வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
வெங்காயம் பொடியாக அரிந்தது - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து.
கொத்தமல்லித் தழை - சிறிதளவு.


 

மீனை நன்கு சுத்தம் செய்து விட்டு, மஞ்சள் தூள் கொஞ்சமும், மிளகாய்த் தூள் கொஞ்சமும், உப்பு சிறிதும், எலுமிச்சைச் சாறு 1/2 ஸ்பூனும் சேர்த்து மீனை 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
மிக்ஸியில் சாம்பார் வெங்காயம், தேங்காய், ஒரு தக்காளி இவைகளைப் போட்டு நன்கு அரைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசல், அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள், உப்பு இவைகளைக் கலந்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளியை பொடிதாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிப்புசெய்து, பொடியாக வெட்டிய தக்காளி, கறிவேப்பிலை இவைகளை வதக்கி, மசாலா கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.
கொதித்த உடன் மீன் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் கொதித்த பிறகு, கொத்தமல்லித் தழை சேர்த்து பரிமாறலாம்.


வேலூர் மீன் குழம்பு சுவைமிக்கது. அலாதியானது. மணமும், ருசியும் வீடு கொள்ளாது.
சாதம், இட்லி, தோசை இவைகளுடன் நன்கு போகும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வேலூர்காரரா நீங்க.. மீன் குழம்பை படிக்கும்போதே நாக்குல நீர் வருது. வேலூர் ஜோதி பிரியாணி குறிப்பு கொடுக்கமுடியுமா?

நன்றி.
ஆமாம் வேலூர் தான்.
தற்சமயம் இருப்பது அமெரிக்காவில்.
முன்னரே பிரியாணி குறிப்பு மேல்விஷாரம் முறையில் கொடுத்துள்ளேன்.
அது மிகவும் நன்றாக வரும்.
ஜோதி பிரியாணியும் அந்த சுவையில்தானே இருக்கும்!
செய்து பாருங்கள்.
நன்றி.

அன்புடன்,
ஜூபைதா.

அன்புடன்,
ஜூபைதா.

இன்று இந்த மீன் குழம்பை கிழங்கா மீன் வைத்து செய்தேன்.என்னிடம் வடகம் இல்லாததால் நீங்க சொன்ன மாதிரி தாளித்து பூண்டு சேர்த்து குழம்பு வைத்தேன்.தங்களின் குறிப்புக்கு மிக்க நன்றி.