Hi friends

Iron Box il ulla black karai eppadi pokuvathu??
Pls reply me.. I am new to this site. I don't know how to type in Tamil

சுத்தமான பழைய துவாலை ஒன்றும் பாரசெட்டமோல் மாத்திரைகள் நான்கைந்தும் (காலாவதியாகிப் போனவை போதும்.) ஒரு குறடும் (இடுக்கி வேண்டாம். சூடேறி கையைச் சுடும்.) எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அழுத்தியைச் சூடாக விட்டு, பனடோல் மாத்திரை ஒன்றைக் குறட்டினால் பிடித்து கறுப்பாக உள்ள இடங்களில் தேயுங்கள். உருகி வரும் போது சுலபமாகத் துவாலையில் தேய்த்து எடுக்கலாம். ஒரே சமயத்தில் முழு அழுக்குக்கும் பராசெட்டமோல் பூச வேண்டாம். காய்ந்து போகும். ஒரு சிறிய இடத்தை முதலில் சுத்தம் செய்யுங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீதி இடங்களையும் சுத்தம் செய்யுங்கள். சற்று நேரம் எடுக்கும், ஆனால் பலன் கொடுக்கும். கைவேலைக்காகப் பயன்படுத்தும் அழுத்தியில், உருகி அப்பிக் கொள்ளும் துணிக் கருகல்களை இப்படித்தான் நீக்குகிறேன்.

அழுத்தியின் அடியில் டாஃப்லான் பூச்சு பூசப்பட்டிருந்தால், அது நீங்கிப் போகும். 'ஸ்டீம் அயர்ன்' என்றால் கவனமாக இல்லாவிட்டால் ஆவி வரும் துவாரங்கள் அடைத்துக் கொள்ளும். பொறுமையாக, அழுத்தாமல் மெதுவாகத் தேய்த்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி இமா அம்மா. இன்று தான் உங்கள் பதிவு பார்த்தேன். மன்னிக்கவும். அம்மா.

மேலும் சில பதிவுகள்