Abortion plz help me

Enakku abortion aagi 13 days aagutu . ennum bleeding nikkala.abortion aana ettana nal bleeding aagum.nama eppadi erukkanum.enna food sapdanum.nan rest la erukka mudiyatu.ella velayum nan tan pakkanum.rompa kastama erukku.payamavum erukku.plz help me friends.

மருத்துவர்கள் செய்துவிட்டிருந்தால் அவர்களது அபிப்பிராயத்தைக் கேட்பது அவசியம்.

நீங்கள் கருக்கலைப்பிற்கு முயற்சி செய்திருந்தால் கூட, மருத்துவரிடம் அபிப்பிராயம் கேட்டுக்கொள்ளுங்கள்.

தானாகவே கலைந்தது என்றாலும் எத்தனை மாதத்தில் கலைந்தது, தினமும் எவ்வளவு இரத்தம் வெளியேறுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். ஒரு தடவை மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

ஓய்வு - உங்கள் உடல் தேவை என்று கேட்காதவரை நீங்களாக ஓய்வு கொடுக்கத் தேவையில்லை. களைப்பாக இருக்கும் சமயம் கட்டாயம் ஓய்வு எடுங்கள். முக்கியமான வேலைகளை மட்டும் செய்யுங்கள். பின்போடக் கூடியவற்றைப் பின்போடுங்கள். இப்போதைக்கு சுருக்கமான சமையல், அத்தியாவசிய வீட்டு வேலைகள் தவிர மற்றவற்றை விட்டுவிடலாம். வீடு சுத்தமாக இருப்பது முக்கியமா; நீங்கள் சுகமாக இருப்பது முக்கியமா?

உணவு - இரத்தம் அதிகம் வெளியேறும் சமயம் - இரும்புச் சத்து, புரதம் செறிந்த உணவுகள் மீண்டும் இரத்தம் ஊறச் செய்யும். மற்றப்படி எல்லாச் சத்துக்களும் கிடைக்கக் கூடிய உணவாகச் சாப்பிடுங்கள்.

//payamavum erukku.// என்றால் கட்டாயம் மருத்துவரைப் பார்த்துவிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்