Motion problem.

வணக்கம்.
எனக்கு பெண் குழந்தை உள்ளது. வயது 1 வருடம் 3 மாதம். அவள் 2 நாட்களாக சரியாக போகவில்லை. காற்று வெளியேற்றும் போது துர்நாற்றம் இருக்கிறது. வயிறு எப்போதும் உப்புசாக இருக்கு என்ன செய்வது.

சிறுநீர் கழிக்கும் இடத்தில் எப்போதும் கை வைத்து சொறிகிறாள். டாக்டர் கிரீம் கொடுத்தாங்க அப்ளை செய்தும் அப்படியே செய்கிறாள். என்னாவாக இருக்கும்.

ஆலோசனை கூறுங்கள்..

சாப்பாடு பிரச்சினையாகி இருக்கலாம். மலச்சிக்கல் இருக்கும் சமயம் வாயுப் பிரச்சினை இருக்கும். வாடையும் இருக்கும். மருத்துவம் சொல்ல எனக்குத் தெரியவில்லை. ஒரு முறை மருத்துவரிடம் கூட்டிப் போய்க் காட்டுங்க.

தொற்று இருக்கலாம். நாப்பி ராஷாகவும் இருக்கலாம். கொடுத்த க்ரீமைத் தொடர்ந்து பயன்படுத்தும் அதே சமயம் உடற்சுத்தத்தில் இன்னும் சற்று அதிக கவனம் எடுங்கள். உள்ளாடை இல்லாமல் விட வேண்டாம். ஈரத்தை உறிஞ்சக் கூடிய துணியில் ஆன உள்ளாடைகளை மட்டும் அணிவியுங்கள். மென்மையான துவாலையைப் பயன்படுத்துங்கள். கைகளைச் சுத்தமாக வைத்திருக்கப் பழக்குங்கள். நகங்களை வெட்டிவிடுங்கள். உடலைத் தொடும் ஒவ்வொரு சமயமும் கைகளை சவர்க்காரம் கொண்டு கழுவ வைத்துப் பழக்குங்கள். குழந்தையின் உடலிலிருந்து அதன் கை வழியே மற்றவர்களுக்குக் கிருமி தொற்றுவதைத் தவிர்க்கும் அதே சமயம் குழந்தையின் கையிலிருந்து தோலுக்குக் கிருமிகள் தொற்றுவதையும் தவிர்க்கக் கூடியதாக இருக்கும். குணமாகுவதற்கு அதிக நாட்கள் காத்திருக்க வேண்டாம். அதிக நாட்கள் விட்டுவிட்டால் குழந்தைக்கு கை வைப்பது ஒரு பழக்கமாக மாறிவிடும். நீங்கள் மீண்டும் மருத்துவரிடம் பேசிப் பார்க்கலாம்.

ஒரு சிறிய வேண்டுகோள் - இழைத் தலைப்பில் இருந்து பெயர்களை நீக்கி விட முடியுமா? உங்களுக்கு 'மாற்றுக' ஆப்ஷன் தெரியும். மாற்றிவிடுங்கள்.

‍- இமா க்றிஸ்

நன்றி. அப்படியே செய்கிறேன். பெயர் நீக்கி விடுகிறேன் சிரமத்திற்கு மன்னிக்கவும்.

மேலும் சில பதிவுகள்