ஆலோசனை வேண்டுகின்றேன்

மிகுந்த குழப்பத்துல இருக்குறேன்..தங்களால் முடிந்த ஆலோசனைகளை தாருங்கள்..திருமணம் முடிந்து 5 வருடங்கள் ஆகின்றது.. என் கணவருக்கு ஒரு மூத்த சகோதரி மற்றும் ஒரு இளைய சகோதரர் உள்ளனர்.. திருமணம் முடிந்த புதிதில் கணவனின் பெற்றோரை நன்றாக கவனித்து கொண்டேன்..ஆனால் சில மாதங்களிலேயே அவர் சகோதரிக்கும் எங்களுக்கும் என் கணவருடைய தந்தையின் சொத்தில் பங்கிற்கு சில உரசல்கள்..கருத்து வேறுபாடுகள்..கடைசியில அவங்களுக்கு அந்த இடத்தை எல்லாம் என் கணவரோட தந்தை எழுதி வச்சிட்டாங்க..அதோட குடும்பத்துல விரிசல் விழுந்துடுச்சு..அவரோட சகோதரி திருமணத்திற்கு பிறகும் கணவர் மற்றும் குழந்தைகளோடு எங்கள் வீட்டில் தான் வசித்து வருகிறார்.. நான் இன்ஜினியரிங் படித்த பெண்.. என் கணவர் மற்றும் அவர் சகோதர சகோதரி அனைவரும் அரசாங்க வேலை செய்பவர்கள்..நன் வேலையில்லா பட்டதாரி..அரசாங்க வேளைக்கு முயன்றுகொண்டிருக்கிறேன்.. நானும் அரசாங்கத்தில் உத்தியோகம் பெற வேண்டும் என்பது என் கணவர் விருப்பம்..வேலை இல்ல அப்டிங்குறத குத்திக்காட்டி அவர் சகோதரி நான் சாப்பிடும் போதெல்லாம் என்னை கேலி பேசுவாங்க வீட்டில்..சண்டை அதிகமா வருதுன்னு தனி குடித்தனம் ஆகிட்டோம் அடுத்து ..
பின் என் கணவர் சகோதரருக்கு திருமணம் ஆனது.. அந்த பெண்ணும் அரசாங்கத்தில் வேலை பார்க்கின்றார்..அவரிடம் நல்ல முறையில் பழக முயன்றேன்..ஆனால் என் கணவர் வீட்டில் எனக்கு இருக்கும் மரியாதையை தெரிந்து அந்த பெண்ணும் என்னை அடிக்கடி அவமானமாகவும் ஏளனமாகவும் பேசுகின்றார்..அதன் பின்பு அவரிடமும் நட்பு பாராட்ட எனக்கு மனமில்லை..கணவர் வீட்டில் யாரிடமும் சிறந்த உறவை பேணமுடியவில்லை.என் பிறந்த வீட்டில் என் பிரச்சனைகளை யாரும் கண்டுகொள்வதில்லை..நான் என் அப்பா அம்மாவை பார்க்க போனால் கூட ,இவள் ஏன் இங்கே வந்தால் என்பது போல் பார்க்கும் அண்ணன் மனைவி..எனக்காக உறவுகள் எதுவுமே இல்லையா என்ற உணர்வு,என் மனதை வாட்டுகின்றது.. தற்போது இரண்டாம் குழந்தையை பெற்று எடுக்க தாய்மை அடைந்துள்ளஎன்..என் மன இறுக்கம் தீர கருணை உள்ளதோடு வழிகூறுங்கள்..

உங்களால் மாற்ற இயலாது என்று தெரியும் எதைப்பற்றியும் மனதில் போட்டுக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் கணவர், குழந்தை, கர்ப்பம் இவற்றைப் பற்றி மட்டும் நினைத்துப் பாருங்கள். மனதைச் சந்தோஷமாக வைத்திருப்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

முதலில் என் வாழ்த்துக்கள்...இரண்டாவது குழந்தைக்கு...என் அனுபவத்தில் கணவன் மற்றும் குழந்தை என்று இருப்பது தான் நல்லது.. யார் என்ன சொன்னாலும் காதுல வாங்கிக்காதிங்க.. நீங்க யாரு அஎப்படின்னு உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதனால எதையும் காதுல வாங்காம இருங்க. குழந்தையை நல்லபடியா பெற்று எடுங்கள்.. அவர்களை வளர்த்து பள்ளிக்கூடம் அனுப்பிட்டு அடுத்து உங்கள் வேலை விசயம் பற்றி யோசியுங்கள்...

தங்கள் மறுமொழிக்கு நெஞ்சார்ந்த நன்றி சகோதரி...எனக்கான உலகத்தில் தற்போது என் கணவர் மற்றும் குழந்தைகள் மட்டுமே உள்ளனர்,தாங்கள் கூறியது போல் அவர்களுக்காகவே வாழ முயற்சிக்கின்றேன்...ஆனால் பிற உறவுகளும் வேண்டும் என்று என் மனது ஏங்குகின்றது...நாங்கள் இருப்பது கிராமம்...எதாவது திருவிழா அல்லது உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் என் கணவர் வீட்டினருடன் தான் சேர்ந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது....நான் அப்பொழுது தனிமைப்படுத்தப்படுவதாக உணர்கின்றேன்...நானாக சென்று பேசினாாலும்,அவர்கள் ஏளனமாக அல்லது அவமதிப்பது போலவே மறுமொழி கூறுகின்றனர்...இந்த நிலைமைகளை எப்படி கடந்து செல்வதென்று தெரியவில்லை...வேறு ஏதேனும் தனியார் வேலைக்கு செல்லலாம் என்றாலும் என் கணவர் அதற்கு அனுமதிப்பதில்லை... அரசாங்க வேலை நிச்சயம் கிடைக்கும்... அப்டி கிடைக்கவில்லை என்றாலும் வீட்லே இருந்து குடும்பத்தை பார்த்துக்கொண்டால் போதும் என்று உறுதியாக சொல்லிவிட்டார்... அரசாங்க வேலை கிடைக்கும் வரை எனது நிலைமை உறவுகளிடம் இது தானா...இல்லை அதன் பின்னரும் தொடருமா என பயமாக உள்ளது சகோதரி...

பயம் - வேண்டாம். நாளை நல்லதாக அமையும் என்று நம்புங்கள். பயப்படுவதால் எதுவும் மாறப் போவது இல்லை. மாறாக, இல்லாத சமயமும் பிரிச்சினை இருப்பதாகவே தோன்றும். எதிர்காலம்... வரும் போது வருவது போல் வரட்டும். இன்றைய நாளை முடிந்தவரை சந்தோஷமாக வாழுங்கள். உறவுகளைப் பொறுத்தவரை... எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம். எதிர்மறையான விடயங்கள் நடக்கும் போது மனதிற்கு பூட்டுப் போட்டுக் கொள்ளுங்கள். கவலைகளை அந்தந்த நாளோடு விட்டு விடுங்கள். மறுநாளுக்கு எடுத்துப் போக வேண்டாம். உங்களுக்காக என் பிரார்த்தனைகள். நிச்சயம் எல்லாம் ஒரு நாள் மாறும்.

‍- இமா க்றிஸ்

நன்றி சகோதரி...ரொம்ப மன இறுக்கத்துல தான் இருந்தேன்...என் பிரச்சனைகளை கலந்து ஆலோசிக்க நீங்க எல்லாம் இருக்குறத நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு...நான் இந்த தளத்திற்கு புதியவள்...இந்த தளத்தை எப்படி எப்படி பயன்படுத்துறதுனு சரியா தெரியல...இந்த தளத்தில் சந்தேகங்கள் பதில்கள் மட்டும் தான் கலந்தாலோசிக்கப்படுமா...
சாதாரணமாக யாரிடமும் பேசிக்கொள்ள முடியாதா... உறவுகளுக்கு மத்தியில் வாழ்ந்தாலும் தனிமையை உணர்ந்த எனக்கு, இந்த தளம் மூலமா நிறைய தோழிகள் உறவுகள் அமையும் என்று நம்புகின்றேன்..

மேலும் சில பதிவுகள்