Payyanukaaga udhavungal

ஹலோ தோழிகளே என் மகனுக்கு 5 வயது UKG படிக்கிறான் யெல்லவற்றையும் உடனே மறன்து விடுகிறான் படிப்பது யெதுவும் அவன் ஞாபகத்தில் இருப்பதில்லை யெப்பொழுதும் யெதயாவது யோசித்துகொன்டே இருக்கிறான் என்ன யொசிக்கிறாஇ என்ட்று கெட்டால் சொல்ல மாட்டேன்கிறான். பள்ளியில் பக்கத்தில் இருப்பவரிடம் பெசிகொன்டே இருக்கிறானம். வேட்டில் யென்னிடமும் அப்படித்தான். படிக்கும் நேரத்திலும் அம்மா அதை சொல்கிறேன் இதை சொல்கிறேன் என்ட்ரு பேசிகொன்டே இருக்கிறான். ணான் மிரட்டினால் மட்டும் படிக்கிறான். அதுவும் கொஞச நேரத்திற்க்கு தான் மறுபடியும் ஆரம்பித்து விடுகிறான். பள்ளியில் மிகவும் மெதுவாக யெலுதுகிறானாம் ஒரே kavalaiyaaga ulladhu அவனை யெப்படி சரி செய்வது என்ட்று கவலையாக உள்ளது. Sorry mobilil type seidhen lots of spelling mistake mannikkavum

//5 வயது// என்றால் யோசிக்க வேண்டாம். இது விளையாடும் வயது. படிப்பதை அவர் மறக்கவில்லை; நீங்களோ ஆசிரியரோ சொல்லிக் கொடுக்கும் போது அவர் எண்ணம் வேறு இடத்தில் இருக்கிறது. எனவே அவர் படிக்கவே இல்லை. அவரது ரசனை வேறு. இந்த வயதில் ரசனை படிப்பில் இராது.

//யெல்லவற்றையும் உடனே மறன்து விடுகிறான்// அவர் மறக்க வேண்டும் என்று மறக்கவில்லை. மனதில் பதியவில்லை. வேறு விதமாகச் சொல்லிக் கொடுத்தால் நினைவில் இருக்கலாம்.

//யெப்பொழுதும் யெதயாவது யோசித்துகொன்டே இருக்கிறான்// இது... என்னைக் கேட்டால் நல்ல விஷயம் என்பேன். கிளிப்பிள்ளை போல் இன்னொருவர் சொல்லிக் கொடுத்ததைக் கேட்டுத் திரும்பச் சொல்வதோ செய்வதோ அல்ல கல்வி. அவராக சிந்திக்க வேண்டும். அது தானாக சரியான சமயத்தில் நிகழும். மற்றக் குழந்தைகளோடு உங்கள் சின்னவரை ஒப்பிட வேண்டாம். இவருக்கு மற்றவர்களிடம் இல்லாத திறமைகள் இருக்கும். //யொசிக்கிறாஇ என்ட்று கெட்டால் சொல்ல மாட்டேன்கிறான்.// :-) நீங்கள் கேட்கும் கேள்வி அவருக்குப் புரியாது. யோசிப்பது என்றால் என்னவென்பதன் சரியான அர்த்தம் அவருக்குப் புரிய இன்னும் சில வருடங்கள் ஆகும். உண்மையில்.... 'அம்மா ஏன் இப்படிப் படி படி என்று கொடுமை செய்றாங்க?' என்று யோசிக்கிறாரோ என்னவோ! :-)

//பள்ளியில் பக்கத்தில் இருப்பவரிடம் பெசிகொன்டே இருக்கிறானம். வேட்டில் யென்னிடமும் அப்படித்தான். படிக்கும் நேரத்திலும் அம்மா அதை சொல்கிறேன் இதை சொல்கிறேன் என்ட்ரு பேசிகொன்டே இருக்கிறான்.// இதில் என்ன தவறு இருக்கிறது! குழந்தை பேசாமல் இருந்தால்தான் யோசிக்க வேண்டும். ஐந்து வயதுக் குழந்தையை பெரியவர் போல் இயங்கச் சொன்னால் எப்படி! அவர் குழந்தைக்கான இயல்போடு இருக்கிறார்.

//ணான் மிரட்டினால் மட்டும் படிக்கிறான்.// மிரட்டாதீங்க. ஒரு பழக்கத்திற்காக பேருக்கு கொஞ்ச நேரம் படிக்க வைக்கலாமே தவிர இந்த வயதில் மிரட்டினால் கல்வி மேல் வெறுப்பு வரும்.

//பள்ளியில் மிகவும் மெதுவாக யெலுதுகிறானாம்// ஆஹா!! என்னை மாதிரியே இருக்கிறாரே! :-) நான் இப்போதும் கூட மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பல வேலைகளில் ஆமை தான். ஆனால் நிறைய விடயங்களில் என் வேகத்திற்கு மற்றவர்களால் ஈடுகொடுக்க முடிவதில்லை. என் கையெழுத்தைப் படிக்கும் எவரும் பாராட்டாமல் இருந்தது கிடையாது. மெதுவாக எழுதுவது குறைபாடு அல்ல. எழுதுவது கொஞ்சமானாலும் சரியாக நேர்த்தியாக இருந்தால் போதாதா! அவர் வயது ஏற ஏறச் சரியாகி விடுவார். யோசிக்காதீங்க.

//ஒரே kavalaiyaaga ulladhu// வீணாகக் கவலைப்படுகிறீர்கள். //அவனை யெப்படி சரி செய்வது// அவர் பிழையாக இருந்தால் தானே சரி செய்ய வேண்டும்! உங்கள் குழந்தை நன்றாக இருக்கிறார். நாய்க்குட்டி ஓரளவு வளர்ந்த பிறகு தான் காவல் காக்கும்; பூனைக்குட்டி ஓரளவு வளர்ந்த பின்னால் தான் எலியைத் துரத்தும். நீங்கள் அவருக்கு இன்னும் கொஞ்சம் காலம் கொடுக்க வேண்டும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்