மகன் உதடு கடிக்கும் பழக்கம்

என் மகன் வயது 2 வருடம் 7 மாதம். மகன் உதட்டை கடித்து கொண்டு இருக்கிறேன். நான் அவன் அருகில் இருக்கும் போது நான் அவனே தடுக்க முடிகிறது. ஆனால் நிறுத்த முடியாமல் தவிக்கிறேன்.

எனக்கு மகளும் இருக்கிறாள். அவள் இதேபோல் நாக்கை கடித்து கொண்டு இருக்கிறாள். அவள் வயது 6. தடுக்க முயன்றேன் ஆனால் முடியவில்லை.

அதேபோல் என் மகனுக்கு ஆகாமல் இருக்க யோசனை தாருங்கள்...

நகம் கடிப்பது போல்தான் இவையும். பழக்கம் ஆரம்பிக்கக் காரணம் என்ன! உங்கள் கவனத்திலிருந்து தப்புகிற, குழந்தைகளின் மனதைப் பாதிக்கும் விடயங்கள் ஏதாவது இருக்கக்கூடுமா!! சிந்தித்துப் பாருங்கள். ஒரு இறுக்கத்திலிருந்து வெளியே வர உதட்டை / நாக்கை கடிக்கிறார்கள் என்றால் நீங்கள் அதைத் தடுக்க எடுக்கும் முயற்சி இறுக்கத்தை இன்னும் அதிகமாக்கலாம். குழந்தையை / குழந்தைகளை சந்தோஷமாக வைத்திருங்கள். கொஞ்சம் கண்காணிப்பாக இருங்கள். காரணத்தைக் கண்டுபிடியுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்