Marbaga katti karaiya

Hai sis..enaku delivery agi 5 months aguthu..bm kuduthutu tha iruka..enaku intha 2 months ah left side breast la oru katti mari iruku .thotta move aguthu...amuthuna pain aguthu..enna panrathu sis...enaku romba bayama iruku..pls suggest me sisters...

இரண்டு மாதங்கள் விட்டுவைத்திருக்கிறீர்கள்! தாமதிக்காமல் மருத்துவரைப் பார்ப்பது நல்லது என்பேன். வீட்டு வைத்தியம் செய்து கரைக்கலாம் என்று நம்பிக் கொண்டு இருக்க வேண்டாம். நீங்கள் எந்த நாட்டிலிருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை. இப்போ உலகம் இருக்கும் நிலையில் நாளை பார்க்கலாம், நாளை மறுநாள் மருத்துவரைப் பார்க்கலாம் என்றெல்லாம் பின்போடுவது... நல்லதல்ல. எதுவுமே இல்லாமலிருந்தால் சந்தோஷம். அதை மருத்துவர் வாயிலிருந்து அறிந்துகொண்டால் நிம்மதி இல்லையா? உங்கள் வதிவிடத்தில் ஊரடங்குச் சட்டமே இருந்தாலும் கூட, சிகிச்சைகளுக்கும் போகும் வசதி மறுக்கப்பட முடியாது. பயணத்திற்கு அனுமதி கொடுப்பார்கள். உங்கள் குடும்ப மருத்துவரைத் தொலைபேசியில் அழைத்து எப்படி அனுமதி பெறுவது என்பதைப் பற்றி விசாரியுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்