Conceive doubt

Hi dears, idhe inge keklamaanu therle edhavadhu thappa irundha sorry. Pona month varaiku copper t potrundhe but thread remove agiduchu adhanala remove pannitte indha month dha Na safe kaha condom use panre indha one month ah dha. so indha month period 4 days thalli poiduchu so oru velai concieve agitena and innoru doubt ennana pona month tablet sapte period thalli poga actuall ah idhu varai sapte the ille but oru situationala sapda vendiyadha poiduchu tablet saptadhukapro adutha day ah crct ah dha period ana so indha month varala adhu dha doubt ah irukku idhu conceive nala thalli pogudha ille tablet saptadhala ipdi aguma am feel so sad and guilt, tablet sapdakudadhunu naane friends kitte solli irukke but ipdi naa sapduvenu nenaikla plzz ans my dr friends

copper t எடுத்த உடனே இருந்து condom பயன்படுத்தியிருந்தால் கர்ப்பமாகக் கூடாது. ஒரேயொரு நாள் condom பயன்படுத்தாதிருந்தாலும் கர்ப்பம் ஆகி இருக்கலாம். condom தயாரிப்பில் பழுதாக இருந்தால் கர்ப்பம் ஆகலாம்.

//oru velai concieve agitena and innoru doubt// தாமதிக்காமல் மருத்துவரைப் பாருங்கள். உங்கள் சந்தேகத்தைச் சொல்லி அபிப்பிராயம் கேளுங்கள்.

//pona month tablet sapte period thalli poga// இது கர்ப்பத்தடை மாத்திரையாக இருந்தாலும், இப்படிச் சில நாட்களுக்கு மட்டும் எடுக்கும் போது கர்ப்பத்தடை வேலையைச் செய்வது இல்லை. நாள் எண்ணிக்கை சரியாக இராது. உங்களுக்கு அதன் பின்பு மாதவிலக்கு ஆனதாகச் சொல்கிறீர்கள். பெரும்பாலும் அந்த மாதம் கர்ப்பமாகி இருக்க மாட்டீர்கள்.

//tablet saptadhukapro adutha day ah crct ah dha period ana// புரியவில்லை. 'டாப்லட் சாப்பிட்டு, நிறுத்தியதன் பின்,' என்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால் சரிதான்.

அதன் பிறகு condom பயன்படுத்தி இருந்தாலும் சரியான முறையில் பயன்படுத்தாத காரணத்தால் அல்லது தயாரிப்பில் பழுது இருந்த காரணத்தால் கர்ப்பம் ஆகி இருக்க நிறையச் சாத்தியம் இருக்கிறது.

//tablet saptadhala ipdi aguma// இல்லை. ஆனால், நீங்கள் மாத்திரை எடுப்பதால் condom தேவையில்லை என்று நினைத்து உடலுறவில் ஈடுபட்டிருந்தால், கர்ப்பம் ஆகி இருக்கலாம்.

//tablet sapdakudadhunu naane friends kitte solli irukke// அந்த மாத்திரைகள் பாதிப்பு ஏற்படுத்துபவையாக இருந்தால் மருத்துவர்களே பரிந்துரைக்க மாட்டார்கள் அல்லவா! தொடர்ந்து பல மாதங்கள் / வருடங்கள் கர்ப்பத்தைத் தள்ளிப் போடுவதற்காக எடுக்கும் போது பாதிப்பு இருக்கலாம். இப்படி சில நாட்கள் எடுக்கும் போது இராது.

கேள்வியைச் சரியாகப் புரிந்துகொண்டேனா என்று தெரியவில்லை. என் பதில் தெளிவாக இல்லாவிட்டால்... சுருக்கமாக //sad and guilt,// வேண்டாம். கர்ப்பம் இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால், கர்ப்பமாக இருக்கக் கூடும் என்கிற காரணத்தால் - தாமதிக்காமல் உடனே மருத்துவரைப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்