மீட் பால் கிரேவி

தேதி: March 10, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் அல்லது மட்டன் - 1/4 கிலோ (அரைத்தது)
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு
சாம்பார் வெங்காயம் - மிக சிறியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - மிக சிறியதாக நறுக்கியது
முட்டை - 1
மிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/4 டீஸ்பூன்
கான் ஃப்ளார் - 6 டீஸ்பூன்
மீட் பால் :
இஞ்சி, பூண்டு விழுது
தயிர் - தாளிக்க
பெரிய வெங்காயம் - 1 (அரைக்கவும்)
பச்சை மிளகாய் - 3 (அரைக்கவும்)
பெரிய தக்காளி - 2 (அரைக்கவும்)
கொத்தமல்லி தழை - சிறிதளவு
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/4 டீஸ்பூன்
சோம்பு பொடி - 1/4 டீஸ்பூன்
தனியாப் பொடி - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு - சிறிதளவு


 

மீட் பால் தயார் செய்ய, சிக்கன் அல்லது மட்டன், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, சாம்பார் வெங்காயம், பச்சை மிளகாய், முட்டை, மிளகாய் பொடி, சீரகப்பொடி, கான் ஃப்ளார், எல்லாவற்றையும் நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற விடவும்
சிறு உருண்டையாக உருட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு விழுது தயிர் போட்டு தாளித்து அரைத்தை போட்டு வதக்கவும். எல்லாப் பொடிகளை போட்டு வதக்கவும்.
கிரேவி பதம் வந்ததும மீட் பால், கொத்தமல்லித் தழை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்