வெங்காய சட்னி

தேதி: March 10, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வெங்காயம் - 5,
தக்காளி - 3,
காய்ந்த மிளகாய் - 8,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 ஸ்பூன்.


 

பெரிய வெங்காயம், தக்காளி, மிளகாய், புளி, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்தவற்றை ஊற்றி, நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.


வதக்குவதற்கு, நல்லெண்ணெய் ஊற்றினால் சுவையாக இருக்கும். நன்றாக வதக்கி, பிரயாணத்திற்கு எடுத்து செல்ல, 2, 3 நாட்களுக்குக் கூட கெடாமல் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்