நெத்திலி மீன் வறுவல்

தேதி: March 10, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நெத்திலி மீன் - 1/2 கிலோ,
எழுமிச்சம் பழம் - 1,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
தனியா தூள் - 1 தேக்கரண்டி,
மிளகு தூள் - 1 தேக்கரண்டி,
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.


 

மீனை சுத்தம் செய்து, சிறிது உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து பிசிறி கழுவவும்.
தண்ணீரை சுத்தமாக வடித்து, மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து, எழுமிச்சம்பழத்தைப் பிழிந்து, நன்கு பிசிறி, 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அரிசி மாவை லேசாக தூவி, கலந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


எண்ணெயில் பொரிக்காமல், தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டும் சுட்டு எடுக்கலாம். இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு இம்முறையில் செய்து கொடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள செல்விஅக்கா
இந்த நெத்திலி மீன் வருவலை செய்தேன் சூப்பராக இருந்தது ..அரிசி மாவு சேர்ப்பதாலா சிப்ஸ் போல இருந்தது அது சாதத்துக்கு சாப்பிடும் முன்னயே தீர்ந்து போனது..ரொம்ப தேன்க்ஸ்

அன்பு ரூபி,
பாராட்டுக்கு ரொம்ப நன்றி. ஆமாம்ப்பா, சிப்ஸ் போல இருக்கும். நான் மாலை ஸ்நேக்ஸாக செய்து தருவேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.