கொழுக்கட்டை உப்புமா

தேதி: March 10, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

புழுங்கல் அரிசி - 2 டம்ளர்,
காய்ந்த மிளகாய் - 4,
துருவிய தேங்காய் - 1/2 மூடி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.


 

அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியபின், உப்பு சேர்த்து நைசாக, கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக (சீடை அளவிற்கு) உருட்டவும்.
உருட்டிய உருண்டைகளை, இட்லி பானையில் வேக வைத்து எடுக்கவும்.
எண்ணெயை காய வைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, துருவிய தேங்காய் சேர்த்து வதக்கிய பின், வேக வைத்த உருண்டைகளையும் சேர்த்து, நன்கு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்