உருளைக்கிழங்கு மசாலா

தேதி: March 10, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ,
சிறிய வெங்காயம் - 5,
காய்ந்த மிளகாய் - 5,
சோம்பு - 1 தேக்கரண்டி,
கசகசா - 1 தேக்கரண்டி,
பூண்டு - 3 பல்,
தேங்காய் - 2 மேசைக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 1,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 ஸ்பூன்.


 

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து, பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம் தோல் நீக்கி, இரண்டாக நறுக்கவும்.
மிளகாய், தேங்காய், சோம்பு,பூண்டு, கசகசா, பட்டை,கிராம்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து,நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின், உருளைக்கிழங்கு, அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு சுருள வரும் வரை விட்டு இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்விக்கா, உங்க உ.கிழங்கு மசாலா நேற்று செய்தேன் ,எல்லோருக்கும் பிடித்தது. என் கணவர் விரும்பி சாப்பிட்ட்டார்.

மாலி

அன்பு மாலி,
நானே இஅதை ரொம்ப நாளா மறந்துட்டேன். எங்க ஊர் ஸ்பெசல் அது. நாளைக்கே நான் செய்யணும்.
பாராட்டியதற்கும், ஞாபகப்படுத்தியதற்கும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.