ஹைதராபாத் சிக்கன் 65

தேதி: March 11, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (7 votes)

காயல்பட்டிணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது ஹைதராபாத்தில் வசித்து வரும் <a href="experts/1787" target="_blank"> திருமதி. ஃபாயிஜா காதர் </a> அவர்கள், அறுசுவை நேயர்களுக்கு நிறைய குறிப்புகள் கொடுத்து வருகின்றார். இந்த சுவையான ஹைதராபாத் சிக்கன் 65 தயாரிப்பை படங்கள் எடுத்து அறுசுவை நேயர்கள் பயனுறும் வண்ணம் இங்கே அளிக்கின்றார். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை அவருக்குத் தெரிவியுங்கள்.

 

எலும்பில்லாத கோழி இறைச்சி - அரைக் கிலோ
முட்டை - 2
தயிர் - அரை கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 2
ஆரஞ்சு, சிகப்பு கேசரி கலர் - இரண்டு சிட்டிகை
சோள மாவு - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை - 1
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - பொரிக்க


 

முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டும் பிரித்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் ஆரஞ்சு கலர், இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு கலக்கி, அதில் நறுக்கின சிக்கன் துண்டுகளைப் போட்டுப் பிரட்டி 1 மணி நேரம் ஊறவிடவும்.
மற்றொரு கிண்ணத்தில் தயிர், சிகப்பு கலர், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து, நன்றாக கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மசாலாவில் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டங்களைப் போட்டு பொரித்து எடுக்கவும்.
அதிகம் சிவக்கவிடாமல் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவற்றை ஒரு தட்டில் வைத்து எண்ணெய் வடியவிடவும்.
பின்னர் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அத்துடன் கரைத்து வைத்துள்ள தயிர் கலவையினை சேர்க்கவும்.
பின்னர் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டங்களையும் சேர்த்து வேகவிடவும்.
மசாலா சுண்டி சிக்கன் துண்டங்கள் நன்றாக வெந்தபிறகு இறக்கி, மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதை எதனுடன் சேர்த்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்?

இதை மட்டன் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிடவும்.

faizakader

அன்புள்ள faizakader madam அவர்களுக்கு,
என்னக்கு சமையலை பற்றி ஒன்றுமே தெரியாது. ஏற்க்கனவே உங்கள் குறிப்பை சமைத்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது.
பாபு அண்ணணிடம் என் பாரட்டை உங்களுக்கு தெரிவித்தேன்.
2 நாட்களில் மடமடவென்று அதிகமாக குறிப்புகளை தந்து அசத்துகிறிரிகள். மேலும் மேலும் பல குறிப்புகள் கொடுக்க என் வாழ்த்துக்கள்.
சிக்கன் 65 மிகவும் நன்றாக இருந்தது. தயிர் கலவையுடன் பொரித்த சிக்கன் சேர்ந்து சாப்பிடுவது இதுதான் firsttime. நன்றாக softதாக இருந்தது.

உங்களின் பாராட்டு மடலை நான் திருமதி. பைஸா காதர் அவர்களுக்கு உடனே forward செய்துவிட்டேன். கிடைக்கப்பெற்றிருப்பார் என்று நம்புகின்றேன்.

செய்து பார்த்தேன். மிக நன்றாக இருந்த்து faiza .உங்கள் குறிப்பு அனைத்தும் மிக நன்றாக உள்ளது. என் வாழ்த்துக்கள்.

திருமதி ராணி மேடம் அவர்களுக்கு
உங்கள் வாழ்த்துமடல் இ.மெயில் மூலம் கிடைத்தது. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தாமதமாக சொல்லியதற்க்கு மன்னிக்கவும்.
சமையல் என்பது ஒரு கலை தான் கஷ்டமில்லை. தினமும் ஒரு சமையலை இதில் உள்ளது போல் செய்யாமல் கொஞ்சம் மாறுதல் செய்து செய்ய முயற்ச்சி செய்யவும். நீங்களும் இன்னும் சில நாட்களில் உங்கள் குறிப்பை தருவிர்கள் என்று நம்புகிரேன்.

faizakader

அஸ்ஸலாமு அலைக்கும்.
ஃபாய்ஜா அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்களா.உங்கள் ஹைதராபாத் சிக்கன் 65 செய்து பார்தேன் நன்றாக இருந்தது.மேலும் குறிப்புகள் கொடுக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

நன்றி

வலைக்குமுஸ்ஸலாம்
திருமதி செய்து கதிஜா அவர்களுக்கு
பல புதிய குறிப்புகளை தந்து அசத்தும் நீங்கள் எனக்கு வாழ்த்து தெரிவிட்டது ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன்.
மேலும் புதிய குறிப்புகள் கொடுக்க முயற்ச்சி செய்கிறேன்.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி

faizakader

தங்களது குறிப்புகளில் தங்களின் பெயரை (ஒருமுறையாவது) தமிழில் குறிப்பிட்டால், தமிழில் எப்படி எழுதுவது என்பதை தெரிந்துகொள்வோம்.

நான் ஃபைஸா என்று குறிப்பிட்டுள்ளேன். சகோதரி அவர்கள் ஃபாய்ஜா என்று குறிப்பிட்டுள்ளார்கள். நான் எழுதியவிதம் தவறோ என்று எண்ணுகின்றேன். பெயர் உரிமையாளராகிய தாங்கள் எப்படி எழுதுவீர்கள் என்பதை குறிப்பிட்டால் வசதியாக இருக்கும். கூட்டாஞ்சோற்றில் உங்கள் பக்கத்தில் உங்கள் பெயரை வைத்து ஒரு தலைப்பு கொடுக்க வேண்டியிருக்கும்.

இது குறிப்பு கொடுக்கும் அனைத்து உறுப்பினர்களுக்குமான வேண்டுகோள். தாங்கள் வழங்கும் குறிப்பில் வழங்கியவர் பெயர் என்ற இடத்தில் தங்களின் பெயரை தமிழில் குறிப்பிடவும். Thalika என்பதை தமிழில் எப்படி எழுதவேண்டும் என்பது எனக்கு இன்னமும் தெரியவில்லை.

எனது பெயர் ஃபாயிஜா காதர். நீங்கள் தவறாக தான் டைப் செய்து இருந்திர்கள் சொல்லனும் என்று தானிருந்தேன். ஆனால் ஏதோ நீனைவில் மறந்துவிட்தேன். தவறுக்கு மன்னிக்கவும்

faizakader

Very nice menu. We have enjoyed the chicken 65 with Ginneess Beer. Delious dish. Wish you all the best.

அன்புள்ள சகோதரி ஃபாயிஜா காதருக்கு
இந்த ஹைதராபாத் சிக்கன் 65 யை இரண்டு முன்று தடவை செய்தேன் ரொம்ப நல்ல வந்தது. என் பிள்ளைகளுக்கு ரொம்ப பிடித்திருந்தது.
ஜலீலா

Jaleelakamal

சிக்கின் 65
போன கிழமை, இந்த முறையில் சிக்கின் 65 செய்தேன் மிக மிக அருமை. வித்தியாசமான சுவையாக இருந்தது. எங்கள் அம்மாவே எனக்குச் சொன்னார் " நீ இப்போ வித்தியாசமான சுவையிலெல்லாம் சமைக்கப் பழகிவிட்டாய்" என்று, கேட்க சந்தோசமாக இருந்தது. இந்தக் குறிப்பிற்கு மிக்க நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹெலொ ஃபாயிஜா காதர்,

உங்களுடய hyderabad சிக்கன் 65 இன்று செய்தென். மிகவும் நன்றக இருந்தது. Thanks for a wonderful recipe.

Hi, I tried this recipe, was very tasty, all of my guest liked it..Keep up the good work