கீரை பச்சை கூட்டு

தேதி: March 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கீரை - 1 கட்டு, (எந்த கீரையானாலும் சரி)
பாசிப்பருப்பு - 2 கைப்பிடி,
சின்ன வெங்காயம் - 7,
தக்காளி - 1,
தேங்காய் துருவல் - 1/4 மூடி,
பச்சை மிளகாய் - 3,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் - 1 ஸ்பூன்.


 

கீரையை சுத்தம் செய்த்து பொடியாக நறுக்கவும். பாசிப்பருப்பை வேக வைக்கவும்.
பாசிப்பருப்பு வெந்ததும், சுத்தம் செய்த கீரை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து வேக விடவும்.
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைக்கவும். கீரை வெந்தவுடன், தேங்காய் அரைத்ததை சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெயில் சிறிது சீரகம் தாளித்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்