மிளகு ரசம்

தேதி: March 11, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு,
துவரம்பருப்பு - 3 தேக்கரண்டி,
மிளகு - 1 1/2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 2,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 ஸ்பூன்.


 

புளியை 1/2 லிட்டரில் நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.
புளித்தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு, துவரம் பருப்பு, மிளகாய், மிளகு, தேங்காய் துருவல் தனிதனியாக வறுக்கவும்.
பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்ததை கொதிக்கும் புளித்தண்ணீரில் சேர்த்து, பொங்கி வரும் சமயம் இறக்கவும். மீதியுள்ள நெய்யில் சீரகம், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்விமா இந்த ரசம் இன்னக்கி வச்சேனா சூப்பர் டேஸ்ட் அதோட வாசனை இன்னும் கிச்சனில் இருக்கு. ரொம்ப நல்லா இருந்து மா தாங்க்யூ வெரிமச்.