திடீர் இட்லி சாம்பார்

தேதி: March 11, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம்பருப்பு - 1 கை,
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 10,
தக்காளி - 1,
காய்ந்த மிளகாய் - 5,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
தனியா - 3 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
வெல்லம் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 ஸ்பூன்.


 

புளியை 1 டம்ளர் நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.
புளித்தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், மிளகு, தேங்காய் துருவல், சீரகம், தனியா, வெந்தயம் தனிதனியாக வறுக்கவும்.
பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்ததை கொதிக்கும் புளித்தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
மீதியுள்ள நெய்யில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் (முழுதாக), நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
வெங்காயம், தக்காளி நன்கு வதங்கிய பின், கொதிக்கும் சாம்பாரில் கொட்டி, வெல்லம் சேர்த்து, 5 நிமிடம் கழித்து இறக்கவும்.


அரைத்ததை சேர்த்த பின், தீயை மிதமாக வைக்கவும், அடிக்கடி கிளறவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

take life as it comes

நல்லா இருக்கீங்களா? அம்மா இன்னக்கி உங்க திடீர் சாம்பாரும், தேங்காய் சட்னியும் செய்ய போறேன் நைட்டுக்கு செய்துட்டு நாளைக்கு சொல்றேன். உங்க போல உள்ளவங்க ரெசிபி எல்லாம் எங்கள sorry sorry என்ன போல learners க்கு ரொம்ப useful இருக்கு.

take life as it comes

I tried out this receipe during Playgroup activity at my home.என் North-Indian Friends புகழ்ந்ததொடு அல்லாமல் Receipe கேட்டு பெற்று கொண்டார்கள். மிகுந்த சுவையுடன் நன்றாக வந்தது

Be Good,Do Good

அன்பு சங்கீதா,
பாராட்டுக்கு நன்றி.
மிக சுலபமான, சுவையான குறிப்பு தானிது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.