இட்லி சாம்பார்

தேதி: March 12, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

துவரம்பருப்பு - 1/4 கிலோ + 2 மேசைக்கரண்டி,
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
மிளகு - 1/2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி,
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ,
தக்காளி - 2,
காய்ந்த மிளகாய் - 6,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
தனியா - 3 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி,
பெருங்காயம் - சிறிது,
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி,
புளி - ஒரு எழுமிச்சை பழ அளவு,
வெல்லம் - சிறிது,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறிது,
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 2 ஸ்பூன்.


 

1/4 கிலோ துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, குழைய வேக வைக்கவும்.
புளியை 1 டம்ளர் நீரில் ஊற வைத்து, கரைத்து, வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, மீதி துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், மிளகு, தேங்காய் துருவல், சீரகம், தனியா, வெந்தயம் தனிதனியாக வறுக்கவும்.
பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, முழு வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.
வெங்காயம், தக்காளி நன்கு வதங்கிய பின், வெந்த பருப்பை கரைத்து ஊற்றவும்.
புளித்தண்ணீர், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
புளி வாசனை போன பிறகு, அரைத்தவற்றை கொதிக்கும் பருப்புடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இறக்கும் முன் வெல்லம் சேர்த்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்புள்ள செல்வி அக்கா

எப்படி இருக்கிறீர்கள் பேசி ரொம்ப நாளாகிவிட்டது உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று எந்த பதிவிலோ படித்தேன் இப்பொழுது எப்படி உள்ளது .. நான் இன்று இட்லிசாம்பார் செய்தேன் அதில் முள்ளங்கி சேர்த்து செய்தேன் நன்றாக இருந்தது நன்றி அக்கா

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

அன்பு ஜுலைகா,
நலமா? இப்ப பரவாயில்லை. மெதுவா மெயில் பண்றென்.
மணக்க மணக்க எங்கம்மா செய்யும் இந்த சாம்பார் ருசி நாக்கில் இன்னமும் இருக்கு. கூட வடையும் செய்து போட்டு ஊற விட்டு சாப்பிட்டா, ஆஹா!
நன்றியை எங்கம்மாவுக்கு தான் சொல்லணும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி அக்கா,

Wish you happy new year. நான் இப்பொழுது உங்களுடைய இட்லி சாம்பார் செய்து இருக்கிறேன். அதில் காரம் மட்டும் அதிகமாக உள்ளது. என்ன செய்வது என்று தெரியவில்லை.

லீலா நந்தகுமார்.

Leela Nandakumar

அன்பு லீலா,
சாரிப்பா, எனக்கு பிசி ப்ராப்ளம் ஆனதால், நாலு நாட்களாக என்னால் அறுசுவைக்கே வரமுடியலை. சிலவகை மிளகாய் காரம் உறைக்கும். இன்னும் கொஞ்சம் பருப்பு வகைகள் வறுத்து அரைத்து ஊற்றினால் சரியாகிவிடும்.
புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி அக்கா,

அன்று நான் செய்த இட்லி சாம்பார் என் கணவருக்கு பிடித்திருந்தது. நான் தப்பித்தேன்.

லீலா நந்தகுமார்

Leela Nandakumar

அன்பு லீலா,
நல்லவேளை, நான் தப்பித்தேன். இல்லைன்னா, என்னை திட்டி தீர்த்திருப்பீங்கல்ல:-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி அக்கா,

நிச்சயமாக இல்லை அக்கா. அன்று நான் செய்தது என்னுடைய தப்பு. அதற்கு உங்களை போய் நான் எப்படி சொல்வேன்? எனக்கு உங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது. எந்த குறிப்பில் போட்டோ கொடுத்து உள்ளீர்கள்?

லீலா நந்தகுமார்.

Leela Nandakumar

அன்பு லீலா,
நலமா? என் போட்டோ பார்க்கணுமா? முகத்தை மனதில் வைத்து திட்ட வசதியாக இருக்கும்னா:-)(பாராட்டவும் இருக்கலாம், இல்ல?)
கீழே உள்ள லின்கில் என் போட்டோ இருக்கு. பார்த்து பயந்துடாதே! அறுசுவை கெட் டு கெதர் திரட்டிலும் இருக்கு.
http://www.arusuvai.com/tamil/node/7790
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி அக்கா,

நான் உங்கள் போட்டோவை பார்த்தேன். அழகாக இருக்கீறிர்கள் (கொஞ்சம் ஒவர் தான் ஆனா அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க). அதே மாதிரி கெட் டூ கெதர் போட்டோஸும் பார்த்தேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. உங்களை பார்த்து பயப்பட மாதிரி நீங்க இல்லை அக்கா. உங்களை நான் திட்டவே மாட்டேன். ஏன் சும்மா நீங்க அதையே சொல்லிக்கிட்டு இருக்கீறிங்க?

லீலா நந்த்குமார்.

Leela Nandakumar

செல்விக்கா!
இன்று இரவு டின்னருக்கு நார்த் இந்தியன் விருந்தாளி வந்திருந்தாங்க. அவங்களுக்கு நம்ம ஊர் சாப்பாடு ரொம்ப பிடிக்கும்.
சில ஐட்டங்களுடன், இந்த சாம்பாரும் வைத்திருந்தேன்.
ரொம்ப ரசித்து சாப்பிட்டு ரெசிப்பியும் வாங்கிட்டு போனாங்க. ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.
நன்றிக்கா!

அன்பு கீதா,
விருந்தினர்களுக்கு அவ்வளவு பிடிச்சிருந்ததா? அப்படின்னா, ரொம்ப சந்தோஷமாக இருக்கும். பாராட்டுக்கு மிக்க நன்றிப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.