பணிவான வேண்டுகோள்

அன்பு நேயர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள், அதாவது சமையற் குறிப்புகளிலிருந்து தங்களுக்கு தெரிந்திராத,அல்லது புழக்கத்தில் இல்லாத உணவுப் பொருட்கள் இருந்தால், அதைப் பற்றி தெரிந்துக் கொள்ள மன்றத்திலுள்ள தெரியாத உணவுப் பொருட்கள் என்ற தலைபில் பதிவி செய்து விடுங்கள்.இதனால் நமக்கு, குறிப்பை கொடுத்தவர் மட்டுமல்லாது, விடைத்தெரிந்த மற்ற நேயர்களின் மூலமாகவும் மிக விரைவில் விடை கிடைக்க வாய்ப்புள்ளது.
மற்றபடி குறிப்பை பற்றிய விமரிசனத்தை மட்டும், அதே பக்கத்திலுள்ள கருத்து தெரிவிக்க என்ற இடத்தில் பதிவுச் செய்துவிட்டால், எல்லோருக்குமே பயன் கிடைக்கும் என்பது எனது கருத்து.நன்றி.

ரொம்ப நாளாகவே உங்களுக்கு கடிதம் எழுத வேண்டுமென்று நினைத்தேன்.சில காரணங்களால் என்னால் எழுத முடியவில்லை.எப்படி இருக்கிறீர்கள்.உங்களது பங்களிப்பு அறுசுவையில் இருக்கும் அனைவருக்கும் பயன்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.உங்களது வெரைட்டியான சமையல் குறிப்புகள்,வீட்டு குறிப்புகள்,எதைப்பற்றிக் கேட்டாலும் தனக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லி உதவுவது,எந்த கேள்விக்கும் தயங்காமல் சரியென படுவதை சொல்வது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

சில நேரங்களில் உங்களின் எண்ணங்கள் என்னுடன் ஒத்துப்போவதைபோல் தோணும்.முக்கியமாக உங்க அம்மா தரும் அந்த கருவாட்டு சாதம் எங்கள் வீட்டில் நடந்ததை படிப்பது போன்று இருந்தது.உங்க பசங்களுக்கு இன்னும் சாப்பாடு ஊட்டி விடுவது போன்றவை.எங்கள் வீட்டில் என் தம்பிக்கு இன்னும் நாங்கதான் சாப்பாடு ஊட்டி விடுவோம்.இன்றைக்கு அவன் 25 வயதாகியும்,வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் என் வீட்டுக்கு வந்தால்(அவனும் ஆஸ்திரேலியாவில் தான் இருக்கிறான்)நான்தான் சாதம் பிசைந்துக் கொடுக்கணும்.

நீங்கள் சொன்ன அத்தனை விஷயங்களும் மிகவும் பிராக்டிக்கலாக சொல்லப்படும் பதில்கள்.எதற்காவது நான் பதில் எழுதலாம் என்று பார்த்தால் அதற்கு முன்பாகவே நான் சொல்ல நினைத்தது அங்கே உங்களால் எழுதப்பட்டு இருக்கும்.ஆச்சரியமாக இருக்கும்.நான் தற்போது வேலை பார்த்துக் கொண்டு இருப்பதால் அடிக்கடி எழுத முடிவது இல்லை.நிறைய நாள் Coal mine,Power station,Gas plant visit னு போயிடறதால நேரம் சரியா இருக்கு.

பாபு அவர்களிடம் கூட உங்களைப்பற்றி சொல்லி இருந்தேன்.அஸ்மா,செய்யது கதீஜா,செந்தமிழ்செல்வி இவர்களைப் பார்க்கும் போதும் ஆச்சரியமாக இருக்கும்.ஒரு வேளை நானும் 9- 5 வேலைப் பார்த்தால் எழுத முடியுமோன்னு நினைக்கிறேன். Engineer ஆக இருப்பதால் நேரம் காலம் பார்க்க முடிவது இல்லை.

தங்கள் பணி மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

ஆமாம் தேவா மேடம். மனோகரி மேடம் all in all அழகு ராணி. எந்த கேள்வி என்றாலும் முதலில் அவர்கள் பதிலை தான் நாம் அதிகம் பார்ப்போம். அவர்களின் பதில்கள் எல்லாம் மிகச் சரியாகவும் இருக்கும். எத்தனை வித விதமான குறிப்புகள். மனோகரி மேடம் என்றால் speed and perfect. மீண்டும் சந்திப்போம்.

ஹலோ தேவசேனா, நான் நலமா இருக்கின்றேன்.தங்களின் நலனையும் பயனளிக்கும் குறிப்புகளில் கண்டுகொண்டேன்.உங்களை முதன் முதலாக சந்திப்பதில் மிக்க சந்தோசம்.
அதைவிட உங்களுடைய எண்ணங்களும் என்னுடையதைப் போலவே தோன்றுகிறது என்று எழுதியிருந்தீர்கள்.அதைப் படித்து அளவில்லாத ஆனந்தம் கொண்டேன். காரணம் எனக்கு பொதுவாக பெண்களின் குணதிசயங்களை பார்க்கும் போது அதில் பெருபாலான பெண்களிடன்,பெரும்பாலும் போலி தனம் மிகுந்து இருப்பதைப் போல் உனறுவேன். ஆண்களிடம் இது போன்ற போலி தனத்தை பார்க்க முடிவதில்லை.
ஆகவே வாழ்க்கைக்கு தேவையற்ற இந்த போலிதனங்களைப் பார்த்து பார்த்து தான், நான் என்னைச் சூழ்ந்துள்ள விசயங்களில் மட்டுமாவது அது நெருங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றேன். மற்ற படி வேறு எந்த வித்தியாசமும் என்னிடத்தில் இல்லை என்று தான் நினைக்கின்றேன்.

ஆக என்னைப் போலவே உங்களின் சிந்தையும் ஒன்றாகவே இருக்கின்றது என்று நீங்கள் கூறும் பொழுது மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
ஆமாம் நீங்கள் கூறுவதுப் போல், பிராக்டிக்கலான முறை தான் வாழ்க்கைக்கு ஒத்து வருவதை அனுபவத்தில் உணர்ந்துள்ளதால் எதையும் வெளிப்படுத்த தயங்கிவதில்லை. இது என் தந்தையிடமிருந்து நான் பெற்ற குணாம். ஆகவே "கூடவே பிறந்தது என்னைக்குமே மாறாது" எங்கேயோ கேட்டதுப் போல் இல்லை.அதே அதே தான்.

உங்களுடைய பயன் தரும் குறிப்புகள் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.இன்னும் நிறைய்ய உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்றோம்.மருத்துவரான உங்கள் கணவருக்கு நீங்கள் தான் மருத்துவம் பார்ப்பதாக எழுதுயிருந்தீர்கள் மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.நீங்கள் கூறிவதுப் போல் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவது நமகொன்றும் புதியதல்லது தானே. என் கணவருக்கும் பல சமையங்களில் அவருக்கு நேரமின்மை காரணமாக, நான் தான் கெஞ்சிக் கேட்டு ஊட்டி விடுவேன்.சில சமையங்களில் செல்லமாகவும் நானே கேட்டு ஊட்டி விடுவேன்.

ஒருவர் நம்மிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர் பார்த்தால், முதலில் அந்த அன்பை காட்டுவது நாமாகத் தான் இருக்க வேண்டும். அப்பொழுது தான் நாம் எதிர்பார்த்தது கிடைக்கும். இப்படி வாழ்க்கைப் பாடத்தை சொந்த அனுபவங்களிலிருந்து தான் நிறைய்ய கற்று வருகின்றேன்.இன்னும் வாழ்க்கையில் வேசமிடாத நிறைய்ய பாத்திரங்களுக்கும் என்னை தயார் படுத்தி வருகின்றேன்.

தாங்கள் இப்படி என்னிடம் மனம்விட்டு பேசியதற்க்கும், என்னையும் பேசவைத்தற்க்கும், நன்றி கூறி தற்காலிகமாக தங்களிடமிருந்து விடைப் பெறுகின்றேன்.நன்றி.

ஹலோ டியர், எப்படி இருக்கின்றீர்கள்? அநியாயத்திற்க்கு ஆல் இன் ஆல் அழகு ராணி என்று எழுதிவிட்டீர்கள். அதற்க்கு பதிலாக ஆல் இன் ஆல் குழப்ப ராணி என்று எழுதியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

நீங்கள் கூறியுள்ளது உண்மை தான். நமக்கு தெரிந்த விசயங்களை அதைப் பற்றி கேட்பவர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்தால் தான் பயனளிக்கும். அதை விடுத்து நம்முடைய்ய செளகரியத்திற்க்கு ஏற்றார் போல் தாமதமாக கூறும் எந்த ஆலோசனையும் சில நேரங்களில் அவருக்கு பயனளிக்காமல் போய்விடும் என்பதால் தான் எனக்கு தெரிந்த விசயங்களை முடிந்த வரையில் உடனுக்குடன் எழுதிவிடுகின்றேன்.
என்னுடைய்ய அதிர்ஷ்டம் பெருபாலான பதிவுகள் என்னுடன் கொஞ்சமாவது சம்பந்தப் பட்டவையாக இருந்து விடுவதால் மிகவும் சுலபமாகவும், விரைவாகவும் பதில் எழுதமுடிகின்றது. மற்ற படி என்னிடத்தில் வேறெந்த திறமையும் இருப்பதாக நான் உணருவதில்லை.
ஆனால் உங்களின் பதிவைப் பார்க்கும் பொழுது தான் நானும் ஏதோ எழுதுகின்றேன் என்று புரிகின்றது. இவ்வாறு என்னை மேலும் எழுத ஊக்குவித்ததற்க்கு மனமார எனது நன்றியை கூறிக்கொள்கின்றேன் நன்றி.

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.நிறைய பெண்களிடம் போலித்தனம் இருப்பது உண்மை.4 ஆண்கள் நண்பர்களாக இருந்தால் அவர்களுக்குள் எந்தவித பிரச்சனையும் வந்து பார்த்த்தில்லை. ஆனால் 4 பெண்கள் தோழிகளாக இருந்தால் இவர் அவரைப் பற்றி அவர் இல்லாத நேரத்தில் சொல்வதும், மனஸ்தாபங்களும் நிறைய பார்த்திருக்கிறேன்.அதேபோல் தமிழ் தெரிந்துக் கொண்டே ஆங்கிலத்தில் தான் பேச தெரியும் என்பது போல் நடிப்பவர்கள்,MTV Host போல பேசுவது எல்லாம் பெண்களிடம் தான் அதிகம்.
அதேபோல் தனக்கு தெரிந்த விஷயங்களை பிறருக்கு சொல்லி உதவும் குணம் அதிகம் யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம்.நிறைய சமயங்களில் என்னிடம் என் சொந்தங்களே கேட்பார்கள் ஏன் எல்லாருக்கும் எல்லா இன்ஃபர்மேஷனும் கொடுக்கற. உனக்கு யாராவது சொன்னாங்களா.நீயாதான கஷ்டப்பட்டு தெரிஞ்சுக்கிட்ட.அப்ப நான் சொல்வேன்,நீங்க நமக்கு மத்தவங்க உதவல,விஷயம் தெரிஞ்சாலும் சொல்ல மாடேங்கறாங்கன்னு தானே குறை சொல்றீங்க.அதே தப்பை நீங்களும் ஏன் செய்யறீங்க.நாம சொல்வதால் நமக்கு எதுவும் நஷ்டம்னா சொல்ல வேண்டாம். ஆனால் எதுவும் நஷ்டமாகப் போறதில்லையேன்னு சொல்வேன்.
அதனால்தான் நீங்கள் அளிக்கும் பதில்களை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும்.நீங்கள் வேலைப் பார்க்கிறீர்களா என்று எனக்கு தெரியாது. எப்படியிருந்தாலும் மற்றவர்களுக்கு உதவ நேரம் ஒதுக்குவது கடினமே.
தங்கள் பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்