நண்டு மசாலா |
|
தேவையானப் பொருட்கள்
- கடல் நண்டு - ஒரு கிலோ
- வெங்காயம் - இரண்டு
- தக்காளி - இரண்டு
- உருளைக்கிழங்கு - கால் கிலோ
- இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
- பூண்டு விழுது - இரண்டு தேக்கரண்டி
- தேங்க்காய் - அரைகோப்பை
- மிளகாய்த் தூள் - இரண்டு தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
- தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
- சீரகம் - ஒரு தேக்கரண்டி
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
- மிளகு - ஒரு தேக்கரண்டி
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
- உப்பு - மூன்று தேக்கரண்டி
- எண்ணெய் - அரைக் கோப்பை
- கொத்தமல்லி - ஒரு கட்டு
|
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
|
 |
நண்டை வெட்டி சிறிது மஞ்சள்தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவேண்டும். உருளைக்கிழங்கை வேண்டிய அளவிற்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்ப்பூவுடன், மிளகு, சீரகத்தை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
|
 |
ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சோம்பைப் போட்டு பொரிய விடவும்.
|
 |
பிறகு நறுக்கின வெங்காயத்தை அதில் கொட்டி வறுக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும்.
|
 |
பச்சை வாடை போனவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைப் போட்டு நன்கு வதக்கவும்.
|
 |
பிறகு எடுத்து வைத்துல்ல அனைத்து தூள்களையும் அதில் சேர்த்து, நறுக்கின கொத்தமல்லியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
|
 |
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காயை ஒரு கோப்பை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
|
 |
அத்துடன் நண்டு துண்டங்களையும், உருளைகிழங்குத் துண்டுகளையும் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
|
 |
தொடர்ந்து இரண்டு கோப்பை தண்ணீரை ஊற்றி, உப்பு போட்டு பிரட்டிவிட்டு வேகவிடவும்.
|
 |
நண்டு வெந்த வாசனை வந்தவுடன் சிறிது கிளறி விட்டு இறக்கி விடவும்.
|
 |
இப்போது சுவையான நண்டு மசாலா தயார். இதனை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
|
 |
அறுசுவையில் இருநூறுக்கும் அதிகமான குறிப்புகள் கொடுத்துள்ள, இன்னமும் கொடுத்துக்கொண்டுள்ள திருமதி. மனோகரி ராஜேந்திரன் அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தற்போது வசிப்பது கனடாவில். சமையலில் நீண்ட அனுபவம் உள்ள இவர் சைவ, அசைவச் சமையல் இரண்டிலும் அசத்தக்கூடியவர்
|
 |
|
முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..
|
சமீபத்தியக் கருத்துக்கள்
45 நிமிடங்கள் 29 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
4 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 3 நொடிகள் முன்பு -
6 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு -