தக்காளி சாஸ் |
நாமே இல்லங்களில் சுவையான, சுத்தமான, ஆரோக்கியமான தக்காளி சாஸ் தயாரித்து வைத்துக்கொள்ளலாம். இந்த வகை சாஸ்தான் சைனீஸ் வகை உணவுகள் தயாரிப்பில் அதிகம் பயன்படும். உதாரணமாக, மஞ்சூரியன், பனீர் மசாலா, ப்ரைடு ரைஸ் போன்றவை தயாரிக்கும்போது இதை பயன்படுத்தலாம்.
|
|
|
தேவையானப் பொருட்கள்
- தக்காளி - அரை கிலோ
- இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
- பூண்டு - 5 பல்
- மிளகாய் வற்றல் - 5
- சீனி - அரை கிலோ
- பட்டை - 3
- கிராம்பு - 12
- ஏலக்காய் - 4
|
இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
|
 |
ஒரு சுத்தமான சிறிய துணியில் ஏலக்காய், கிராம்பு, பட்டை மூன்றையும் சேர்த்து சிறிய மூட்டையாக கட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தக்காளியைப் போட்டு அவை மூழ்கும் அளவிற்கு சற்று அதிகமாக தண்ணீர் ஊற்றி அதில் கட்டி வைத்திருக்கும் மூட்டையை போடவும்.
|
 |
பாத்திரத்தை மூடி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
|
 |
தக்காளி வெந்து மேலே உள்ள தோல் சுருங்கியதும் இறக்கி வைத்து விடவும்.
|
 |
பிறகு தக்காளியை தோல் உரித்து மிக்ஸியில் போட்டு அதனுடன் பூண்டு, இஞ்சி, மிளகாய் வற்றல் போட்டு அரைக்கவும்.
|
 |
நன்கு மாவாக அரைத்து எடுத்து, அரைத்த விழுதை வடிகட்டிக் கொள்ளவும்.
|
 |
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து வடிகட்டிய விழுதை ஊற்றி வேகவிடவும். அவ்வபோது கிளறவும்.
|
 |
அதில் சீனியை சேர்த்து நன்கு கிளறிவிடவும். சுமார் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
|
 |
இப்போது தக்காளி சாஸ் தயார். தக்காளி கெட்சப் வேண்டுமென்றால், தக்காளியுடன் கால் கிலோ வெங்காயத்தையும் சேர்த்து வேகவைத்து அரைக்கவேண்டும். அரைக்கும்போது ஒரு மேசைக்கரண்டி மிளகு, ஒரு குடைமிளகாய் சேர்த்து அரைக்கவும்.
|
 |
இந்த சுவையான தக்காளி சாஸ்ஸை செய்து காட்டியவர் திரு. சண்முகம் அவர்கள். நாகை சத்யம் கேட்டரிங் கல்லூரியில் பணியாற்றும் இவர், செட்டிநாடு, தந்தூரி, அரேபியன் உணவுகள் தயாரிப்பதில் திறன் வாய்ந்தவர். அரேபியன் உணவுகள் தயாரிப்பில் தனியாக டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளார்.
|
 |
|
|
|
|
|
முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..
|
|
|
சமீபத்தியக் கருத்துக்கள்
10 நிமிடங்கள் 12 நொடிகள் முன்பு -
3 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு -
9 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு -