தூனா பிஷ் ரோல்

தேதி: March 13, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முதலில் தேவையான பொருள்களை தயாராக வைக்கவும்.
மைதா மாவு - 2 கப்
முட்டை - 1
தேங்காய் பால் - முக்கால் கப்(கெட்டியானது)
உப்பு - 2 தேக்கரண்டி

கேரட் - பாதி
உருளைகிழங்கு - 2
பட்டாணி - 1/2 கப்
முட்டை கோஸ் - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
தூனா மீன் - 1 டின்
ரம்பை இலை - 2 துண்டு
கருவேப்பிலை - சிறிது
மசாலாதூள் தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
தனியா - 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு


 

முதலில் கேரட்டை தோலை நீக்கி வட்டமாக நறுக்கிகொள்ளவும்.உருளைகிழங்கையும் தோலை நீக்கி கொஞ்சம் பெரிதாக நறுக்கிகொள்ளவும்.

பின் இவற்றை தண்ணீர் ஊற்றிசிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.

பட்டாணியை தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.

பச்சைமிளகாய்,முட்டை கோஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பின் மைதாமாவில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பும், தேங்காய் பாலும் சேர்த்து கலக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துவைக்கவும்.

கட்டிகள் இருந்தால் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிவிட்டு எடுத்து தனியாகவைக்கவும்.

தூனாமினை தண்ணீரை வடித்துவிட்டு வைக்கவும்.

பின் அடுப்பில் ஒரு பேனை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை ,ரம்பை இலை போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய முட்டை கோஸை சேர்த்து வதக்கவும்.பின் பச்சைமிளகாய், தூனா மீனை சேர்த்து வதக்கி எல்லாதூளையும்,உப்பையும் சேர்க்கவும். (மிளகு தூளை தவிர)

பின் வேகவைத்த காய்கறிகளை போட்டு நன்கு கிளறி மசாலா அனைத்தும் காய்கறியில் சேறும் வரை பிரட்டி விடவும்.பின் மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்

பின் அடுப்பில் இருந்த்து இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறியதும் கைகளால் நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

பின் ஒரு நான் ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து கரைத்த மாவில் இருந்து ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றி தவா முழுவதும் பரவும் படி மாவை நன்கு சுற்றி விடவும்.தீயை மிதமானதாக வைக்கவும் மைதா ஆப்பம் வெந்ததும் தன்னாலயே கழன்று வந்துவிடும்.

பின் எல்லாமாவையும் இதே போல சுட்டுவைக்கவும்.

பின் சுட்டுவைத்த ஆப்பத்தில் இருந்து ஒன்றில் பிசைந்துவைத்த காய்கறி கலவையை வைத்து ரோல் போல் சுற்றி வைத்து தக்காளி சாஸ் உடன் பறிமாறவும்.


புளிப்பு தேவையானால் கடைசியில் மிளகு தூள் சேர்த்த பின்னாடி எழுமிச்சை பழத்தை பாதி பிழிந்து சேர்த்துக்கொள்ளலாம்

மேலும் சில குறிப்புகள்