காரப் புட்டு

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைப்பருப்பு - 1 1/4 கப்
பயத்தம்பருப்பு - 1 1/4 கப்
புளி - எலுமிச்சம் பழ அளவு
மிளகாய்வற்றல் - 10
கொத்தமல்லி - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
கடலைபருப்பு - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1 கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 100 மில்லி
உப்பு - அளவாக


 

பருப்புகளை சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைத்து வடித்து, சிறிது உப்பு சேர்த்து கெட்டியாகவும் கொரகொரப்பாக அரைக்கவும்.
புளி, உப்பு, சேர்த்து ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.
எண்ணெய் சட்டியில் எண்ணெய் விட்டு மிளகாய், கடலைப்பருப்பு, கொத்தமல்லி, உளுத்தம்பருப்பு, மஞ்சள், பெருங்காயம் விட்டு வறுத்து இடித்து கொள்ளவும்.
இடித்த பின் அதில் தேங்காய் துருவல் சேர்த்து கொரகொரப்பாக இடிக்கவும்.
அரைத்த மாவை இட்லி ஊற்றி வெந்தவுடன் துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.
கட் செய்து வைத்திருக்கும் துண்டுகளில் புளி தண்ணீர் விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெயில் விட்டு கடுகு தாளித்து, கறிவேப்பிலை போட்டு பிசறி வைத்த துண்டுகளை போட்டு பிரட்டி இடித்த பொடியையும் போட்டு கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்