காய்கறி சாம்பார்

தேதி: March 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

துவரம் பருப்பு - 1/2கப்
சிறுபருப்பு - 3 மேசைக்கரண்டி
உருளை கிழங்கு - 2 பெரியது
கேரட் - 1 சுமாரானது
தக்காளி - 3 சுமாரானது
கத்தரிக்காய் - 1 சுமாரானது
முட்டை கோஸ் - சிறிது
முருங்கைக்காய் - பாதி
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 2
மசாலாதூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு தூள் - 1/2 தேக்கரண்டி
வத்தல் தூள் - சிறிது
வத்தல் - 2
சீரகம் - சிறிது
கடுகு - சிறிது
சோம்பு - சிறிது
பூண்டு - 5 பல்
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
எண்ணெய் - தாளிப்புக்கு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் பால் - 3 மேசைக்கரண்டி
சாம்பார் பொடி - 3 மேசைக்கரண்டி


 

முதலில் துவரம் பருப்பு,சிறுபருப்பு இரண்டையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறிது மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து நன்கு குழைய வேகவைத்துக்கொள்ளவும்.

கேரட்டை தோல் நீக்கி வட்டமாக நறுக்கி வைக்கவும்.

உருளைகிழங்கை தோல் நீக்கி சுமாரான அளவாக நறுக்கி வைக்கவும்.

கத்தரிக்காயை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

தக்காளியை சிறிதாக நறுக்கிகொள்ளவும்.பச்சைமிளகாயை நான்காக கீறிக்கொள்ளவும்.

முருங்கைக்காயை நீளவாக்கில் நறுக்கிவைக்கவும்.முட்டை கோஸை அப்படியே போட்டுதான் வேகவைக்கனும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிவைக்கவும்.தாளிப்புக்கு மட்டும் நீளவாக்கில் சிறிது நறுக்கிவைக்கவும்.

பின் எல்லா காய்கறிகளையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.

பின் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம் ,சோம்பு போட்டு தாளிக்கவும்.

பின் வத்தல்,பூண்டு போட்டு வதக்கி,கருவேப்பிலை,வெங்காயம் போட்டு வதக்கவும்.

பின் சீரகத்தூள்,சோம்புதூள், வத்தல் தூள்,மசாலாதூள்,1 1/2 மேசைக்கரண்டி சாம்பார் பொடி போட்டு வதக்கவும்.

தீயை மிதமானதாகவைக்கவும்.பின் வேகவைத்த காய்கறிகளையும் தண்ணீருடன் சேர்த்து ,பச்சைமிளகாயையும் சேர்த்து கிளறவும்.பருப்பை கொஞ்சம் கடைந்ததுபோல் வைத்து தண்ணீருடனே சேர்க்கவும்.தேவையானால் தண்ணீர் சிறிது ஊற்றிக்கொள்ளவும்.

பின் சிறிது மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் பால் சேர்த்து கிளறி நன்கு கொதிக்கவிடவும்.

பின் சாம்பார் பொடி மீதம் இருப்பதை சேர்த்து நன்கு கிளறி கொஞ்சம் நேரம் கழித்து கெட்டியானதும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சாம்பார் வைக்கத்தெரியாமல் குறிப்புத்தேடினேன்.உங்கட குறிப்பில காய்கறி சாம்பார் இருக்குமெண்டு நினைக்கவே இல்ல.நல்ல சுவயா இருந்தது.போட்டோ அனுப்புறன் பாருங்கோ.

சுரேஜினி

சாம்பார் சுவையா இருந்ததா செய்ததுக்கு நன்றி.போட்டோ எடுத்ததுக்கு இன்னொறு நன்றி.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதிஜா உங்க சாம்பார் செய்ய எனக்கும் விருப்பமாக உள்ளது,இன்று செய்யலாம் என்று இருக்கேன்.

சிறு பருப்பு என்றால் என்ன? தயவு செய்து சொல்லுங்கள் கதீஜா

அன்புடன்
துஷி

பாசி பருப்புதான் சிறு பருப்புன்னு சொல்லுவோம்.

அன்புடன் கதீஜா.

உங்கள் பதிலுக்கு நன்றி கதீஜா

அன்புடன்
துஷி