முள்ளங்கி கூட்டு

தேதி: March 15, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

முள்ளங்கி - 1/4 கிலோ
கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
பூன்டு - 2 பல்
தேங்காய் துருவல் - கொஞ்சம்
கடுகு - கொஞ்சம்
உப்பு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய் - கொஞ்சம்
வெள்ளை உளுத்தம் பருப்பு - 3 தேக்கரண்டி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு


 

முள்ளங்கியை துருவவும். எண்ணெயில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், வறுத்து பொடி பண்ணவும்.
எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, போட்டு தாளித்து முள்ளங்கி போட்டு வதக்கவும்
அதில் உப்பு, தேங்காய் துருவல், வறுத்தப்பொடி போட்டு வதக்கி விட்டு புளியை கரைத்து ஊற்றவும். சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்