வெஜிடபுள் குழாய் புட்டு

தேதி: March 15, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை ரவை - 2 கப்
காரட் - 2
உருளைக்கிழங்கு - 2
பச்சைப்பட்டாணி - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/4 கப்
உப்பு - 1/4 டீஸ்பூன்
கோஸ் - 1/2 கப்
முந்திரி - 8
எண்ணெய் - 3 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
கரம் மசாலாத் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 2
தண்ணீர் - 1/2 கப்


 

காரட் துருவிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைக்கவும்.
எண்ணெய் ஊற்றி காரட், கோஸ், பச்சைப்பட்டாணி, கரம் மசாலாத் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய் வதக்கவும்.
கோதுமை ரவை தயிர் தண்ணீர் 1/2 கப், மற்ற கலவை போட்டு கலந்து தேங்காய் துருவல், உப்பு, முந்திரி போட்டு புட்டு குழலில் போட்டு வேகவைக்கவும்.
வெந்ததும் சாஸ்வுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்