கேரட் வறுவல்

தேதி: March 15, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - 4,
பூண்டு - 4 பல்,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி,
சோம்பு - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.


 

கேரட்டை மெல்லிய வட்டமாக நறுக்கவும்.
சோம்பு, பூண்டை நசுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, நசுக்கிய சோம்பு, பூண்டு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
கேரட், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
ஒரு கை தண்ணீர் தெளித்து, மூடி, கேரட் வெந்தபின், தேங்காய் துருவலை தூவி, சிறிது எண்ணெய் விட்டு, முறுகலாக வந்த பின் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி மேடம் இன்று கேரட் வறுவல் செய்தேன்.பூண்டுலாம் போட்டு செய்ததில் நல்லா இருந்தது டேஸ்ட்.

வித்தியாசமா இருந்துசு சுவை. :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு மோனி & வனிதா,
இருவரின் பாராட்டுக்கும் நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.