சில்லி சிக்கன்

தேதி: March 16, 2007

பரிமாறும் அளவு: 4 members

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
முட்டை - 1
சோளமாவு - 1/2கப்
இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
ரெட் சில்லி சாஸ்- 1ஸ்பூன்
கீரின் சில்லி சாஸ் - 1ஸ்பூன்
சோயா சாஸ் - 1ஸ்பூன்
வினிகர் - 1ஸ்பூன்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 2
உப்பு -தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க


 

சிக்கனுடன் முட்டை, சோளமாவு, இஞ்சி பூண்டு விழுது, ரெட் சில்லி சாஸ், கீரின் சில்லி சாஸ் ,சோயா சாஸ் , வினிகர், உப்பு போட்டு விரவி 1 மணி நேரம் ஊறவைக்கவும்
வாணலியில் எண்ணெய் காயவைத்து சிக்கனை பொரித்து எடுக்கவும்.
பிறகு ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம் போட்டு பொன்னிரமாக வதக்கவும்.
ப.மிளகாய், சிக்கனை , சேர்த்து கிளறி விடவும்.
5 நிமிடம் வதக்கி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்