ஸ்வீட் பங்களாபாத்

தேதி: March 17, 2007

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 1/2 கப்
சீனி - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் பொடி - 3 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 4 டீஸ்பூன்
உலர்ந்த திராட்சை - 2 டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
உப்பு - சிட்டிகை (சுவைக்கு)
பால் - 2 கப்
மில்க் மெய்ட் - 1/4 கப்


 

முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை சிறியதாக நறுக்கவும்
பச்சரிசியில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற விடவும்
ஊறவைத்த பச்சரிசியை பாலில் போட்டு முக்கால் பதம் வேகவிடவும்
அதில் சீனி போட்டு, மில்க் மெய்ட், உப்பு, தேங்காய்ப்பால் பொடி சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்
பாத்திரத்தில் நெய்போட்டு முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை பொரித்து போட்டு கப்பில் ஊற்றி பரிமாறவும்.


தேவையானால் சீனி கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்

மேலும் சில குறிப்புகள்