தானிய குருமா

தேதி: March 18, 2007

பரிமாறும் அளவு: 7 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொண்டைக்கடலை - 1 கப்
காராமணி - 1/2 கப்
பச்சை பட்டாணி - 1 கப்
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
பூண்டு - 6 பல்
தயிர் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
நெய் - சிறிது
பட்டை - சிறிது
ஏலக்காய் - சிறிது
கிராம்பு - சிறிது
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1/2 தேக்கரண்டி
தனியா பொடி - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி - கொஞ்சம்
எண்ணெய் - 10 கிராம்
எலுமிச்சை பழம் - 1
தேங்காய் - 1/2


 

கொண்டைக்கடலை, காராமணி, பச்சை பட்டாணி 8 மணி நேரம் ஊறவைக்கவும்
பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, சிறு சிறுத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துருவி அரைத்து பிழிந்து கெட்டியானப் பால் எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெயையும், நெய்யையும் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைப் போட்டு சிவக்க வதக்கவும்.
அதன் பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தயிர் சேர்த்து வதக்கவும்
பிறகு நறுக்கின பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்
தானியங்களை போட்டு வதக்கவும்
பிறகு மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, தனியா பொடி, கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
தேங்காய் பால், கொத்தமல்லி மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இறக்கும் போது எலுமிச்சைச்சாறு ஊற்றவும் நன்றாகக் வெந்ததும் இறக்கி வைத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்