வாழைப்பழ பர்பி

தேதி: March 18, 2007

பரிமாறும் அளவு: 20 பர்பிகள் வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

மசித்த பூவன் பழ விழுது - 1 கப்,
சர்க்கரை - 3கப்,
ஆரஞ்சு ஜூஸ் - 1 மேசைக்கரண்டி,
வெண்ணெய் - 1/2 கப்.


 

அகலமான பாத்திரத்தில் பழவிழுது, சர்க்கரை, ஆரஞ்சு ஜூஸ் கலந்து 5 நிமிடம்
கிளறவும். கிளற கடினமாக இருந்தாலும், விடாமல் கிளறவும்.
பொன்னிறம் வந்ததும், வெண்ணெய் சேர்த்து கிளறி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியபின் துண்டுகளாக்கவும்.


மேலும் சில குறிப்புகள்