கோதுமை புதினா சாதம்

தேதி: March 18, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை ரவை - 1 கப்,
தக்காளி -2,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி,
மசாலா தூள் - 1 தேக்கரண்டி,
புதினா - 1கப்,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 தேக்கரண்டி.


 

கோதுமை ரவையை 1:2 என்ற அளவில் தண்ணீர் விட்டு குக்கரில் வேக விடவும்.
வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மசாலாதூள், புதினா, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து விழுதாக வதக்கவும்.
வெந்த கோதுமையை சேர்த்து, நன்கு கிளறி இறக்கவும்.


தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்