ஜவ்வரிசி முறுக்கு

தேதி: March 18, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி மாவு - 1 கிலோ,
சின்ன ஜவ்வரிசி - 1/4 கிலோ,
புளித்த தயிர் - 1/4 லிட்டர்,
மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி,
எள் - 2 தேக்கரண்டி,
ஓமம் - 2 தேக்கரண்டி,
வெண்ணெய் - 50 கிராம்,
எண்ணெய் - சுடுவதற்கு,
உப்பு - தேவையான அளவு.


 

ஜவ்வரிசியைக் கழுவி, தயிரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
எள்ளையும் ஓமத்தையும் தண்ணீர் ஊற்றி, கழுவி, கல் அரித்து தேய்த்து எடுக்கவும்.
அரிசி மாவுடன் ஊற வைத்த ஜவ்வரிசி, மிளகாய் தூள், எள், ஓமம், வெண்ணெய் போட்டு நன்றாக பிசையவும்.
தேன்குழல் அச்சில் போட்டு, நேரடியாக காய்ந்த எண்ணெயில் பிழியவும்.


முறுக்கு போல் வடிவம் வராது, துண்டு துண்டாகத் தான் வரும்.
நைலான் ஜவ்வரிசி எனப்படும் மெல்லிய ஜவ்வரிசியை உபயோகிக்கவும்.
தேன்குழல் அச்சில் பெரிய துளையாக இருந்தால் தான் ஜவ்வரிசி அடைக்காமல் வரும்.

மேலும் சில குறிப்புகள்