மைதா போண்டா

தேதி: March 19, 2007

பரிமாறும் அளவு: 20 போண்டாக்கள் வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 1 டம்ளர்,
மிளகு - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தயிர் - 1கப்,
ஆப்ப சோடா - 1/4 டீஸ்பூன்,
தேங்காய் - 1/4 மூடி,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - பொரிக்க.


 

மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து வைக்கவும்.
தேங்காயை சிறு பல்லாக நறுக்கவும்.
எல்லாவற்றையும் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்தவற்றை சிறுசிறு போண்டாக்களாக உருட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


போண்டா உள்ளே கூடுகூடாக வரவேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்கள் குறிப்பிற்கு நன்றி... மாவின் பதம் எப்படி இருக்க வேண்டும்? சப்பாத்தி மாவு போலவா?நெற்று கொஞ்சம் தண்ணீர் நிறைய சேர்த்து விட்டேன்..

நன்றி
அம்பிகா

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.