Tosai

Vanakkam Madam,
Tosai poseh posehvendru vare enna seiye vendum?

Indra,
Malaysia..

டியர் இந்திரா, தோசை பொசு பொசென்றிருக்க உளுத்தம் பருப்பை எடுத்துக் கொண்ட அரிசியில் சரி பாதியாக சேர்த்து அரைத்து செய்யலாம்.
அரைக்கும் பொழுது அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக ஊறவைக்காமல் சேர்த்து ஊறவைத்து அரைக்கலாம்.
மாவை மிகவும் மைய்ய அரைக்க வேண்டாம்,சற்று கரகரப்பாக அரைத்து வழக்கமாக கரைப்பதை விட சற்று கெட்டியாக கரைத்து புளிக்கச் செய்யலாம்.
ஆப்பச் சோசாவை ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளலாம்.
மாவை அரைக்கும் பொழுது சிறிது வடித்த சோற்றைச் சேர்த்து அரைக்கலாம்.
தோசை வார்க்கும் பொழுது சற்று தடிமனான தோசையாக ஊற்றி மூடியைப் பொட்டு வேகவிடவும்.திருப்பி போட வேண்டிய அவசியமிருக்காது. அல்லது திருப்பி போட்டு மூடியை போடாமலும் சுடலாம்.
முக்கியமாக அடுப்பின் அனலை குறைவாக வைக்க வேண்டும். ஒகேவா, நன்றி.

Nandri Madam..

மேலும் சில பதிவுகள்