காரப் பூந்தி -2

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு - கால் கிலோ
அரிசி மாவு - 200 கிராம்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
பச்சரிசிமாவு - 50 கிராம்
வற்றல்தூள் - தேவையான அளவு
உப்புத்தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

இரண்டு மாவையும் கலந்து சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் எண்ணெயின் மேல் பெரிய கண் கரண்டியைப் பிடித்துக் கொண்டு ஒரு கரண்டி மாவு எடுத்து அதில் ஊற்றி வேகமாகத் தேய்த்து விடவும்.
மாவு மேலே விழாமல் கண்கரண்டியை எடுத்து விட வேண்டும். காராப்பூந்தி எண்ணெய்க்கு மேலே மிதந்து வந்ததும் அரித்து எடுத்து கண் தட்டில் வடியவைக்கவும். இதேபோல் மீதி மாவையும் சுட்டு எடுக்கவும்.அதில் வற்றல் தூள், உப்புத்தூள் கலக்கவும்.
ஒரு தேக்கரண்டி நெய்யில் பாதியாக ஒடித்த முந்திரிப்பருப்பு கருவேப்பிலை வறுத்துப் போடவும்.


மேலும் சில குறிப்புகள்