ஜிஞ்ஜர் பிரட்

தேதி: March 19, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதாமாவு - ஒன்றரை கோப்பை
வெண்ணெய் - கால் கோப்பை
பிரவுன் ஷுகர் - முக்கால் கோப்பை
முட்டை - ஒன்று
சுடுதண்ணீர் - முக்கால் கோப்பை
இஞ்சி தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டையின் தூள் - ஒரு தேக்கரண்டி
கிராம்பு தூள் - கால் தேக்கரண்டி
பேக்கிங் சோடா - ஒரு தேக்கரண்டி
உப்புத்தூள் - அரைதேக்கரண்டி


 

மைதாமாவில் சோடா, உப்பு மற்றுமுள்ள தூள்களைப் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறைகள் சலித்து வைக்கவும்.
மிக்ஸரில் வெண்ணெய், சர்க்கரை, முட்டை ஆகியவற்றை சேர்த்து நன்கு க்ரீமாக கலக்கவும்.
அதில் மைதா கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். தொடர்ந்து சுடு தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும்.
பிறகு இந்த கலவையை வெண்ணெய் தடவிய பிரட் லோஃப் பானில் பரவலாக ஊற்றி, 350 டிகிரி Fல் சூடாக்கிய அவனில் வைத்து பேக் செய்யவும்.
நாற்பது நிமிடங்கள் கழித்து பிரட் வெந்ததை உறுதி செய்துக் கொண்டு வெளியில் எடுக்கவும்.
பத்து நிமிடங்கள் பானிலேயே வைத்திருந்து விட்டு, ஆறவைக்கும் தட்டில் வைத்து முழுவதும் நன்கு ஆறியவுடன் துண்டுகள் போட்டு பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்