ஸ்சுவீட் கோல்ஸ்லா

தேதி: March 21, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மெல்லியதாக நறுக்கிய கேபேஜ் - நான்கு கோப்பை
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
செலரித்தண்டு - ஒன்று
நறுக்கிய குடைமிளகாய் - கால் கோப்பை
மயோனைஸ் - அரைக்கோப்பை
அன்னாசிபழத்துண்டுகள் - கால் கோப்பை
அன்னாசிப்பழச்சாறு - கால் கோப்பை
சர்க்கரை - ஒரு மேசைக்கரண்டி
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி.


 

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட்டை பெரிய துளைகலுள்ள துருவியால் துருவிக் கொள்ளவும்.
செலரியை அதன் இலைகளுடன் சேர்த்து மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
ஒரு பெரிய கோப்பையில் கேபேஜ்ஜுடன் நறுக்கிய பொருட்களைச் சேர்த்து போடவும்.
பிறகு ஒரு சிறிய கோப்பையில் மயோனைஸுடன் மற்றப் பொருட்களையும் போட்டு நன்கு கலக்கிவிட்டு காய்கறிகளின் மீது ஊற்றி நன்கு கலக்கி விடவும்.
தயாரித்த சாலடை மூடி, குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்து தேவைப்படும்பொழுது எடுத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனேகரி அக்கா உங்க சமையல் எல்லாம் நால்லா இருக்குக்கா.... நான் மீன் குழப்பு வேச்சேன் நால்லா இருந்துக்கா அதுக்கு உங்கலுக்கு நன்றிக்கா.....

செல்லரித்தண்டு, மயோனைஸ்
என்றால் என்னப்பா?

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*