தூனா பிஷ் ரோல்

தேதி: March 21, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

அறுசுவையில் நூற்றுக்கும் அதிகமான குறிப்புகளை வழங்கியுள்ள <a href="experts/1377" target="_blank">திருமதி. செய்யது கதீஜா</a> அவர்களின் தயாரிப்பு இது. வெளிநாடுகளில் தூனா பிஷ் (Tuna fish) பதப்படுத்தப்பட்டு டின்களில் விற்பனைக்கு வருகின்றன.

 

தூனா மீன் - 1 டின்
மைதா மாவு - 2 கப்
முட்டை - 1
கெட்டியான தேங்காய் பால் - முக்கால் கப்
உப்பு - 2 தேக்கரண்டி
கேரட் - பாதி
உருளைகிழங்கு - 2
பட்டாணி - அரை கப்
முட்டை கோஸ் - அரை கப்
பச்சைமிளகாய் - 2
ரம்பை இலை - 2 துண்டு
கறிவேப்பிலை - சிறிது
கறி மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
தனியாத்தூள் - அரைத் தேக்கரண்டி
சீரகத்தூள் - அரைத் தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு


 

மைதாவை சலித்து எடுத்து வைக்கவும். தேங்காயைத் துருவி அரைத்து, முக்கால் கப் கெட்டிப்பால் எடுத்துக்கொள்ளவும்.
கேரட்டின் தோலை நீக்கி வட்டமாக நறுக்கிகொள்ளவும். உருளைகிழங்கையும் தோலை நீக்கி கொஞ்சம் பெரிதாக நறுக்கிகொள்ளவும். பச்சைமிளகாய், முட்டைகோஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
நறுக்கின கேரட் உருளைக்கிழங்கு துண்டங்களை தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். பட்டாணியை தனியாக வேகவைத்துக்கொள்ளவும். தூனாமீனை தண்ணீரை வடித்துவிட்டு எடுத்து வைக்கவும்.
மைதாமாவில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பும், தேங்காய் பாலும் சேர்த்து கலக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும். கட்டிகள் இருந்தால் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிவிட்டு எடுத்து வைக்கவும்.
அடுப்பில் ஒரு தவாவை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, ரம்பை இலை போட்டு தாளிக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய முட்டை கோஸை சேர்த்து வதக்கவும்.
அதன் பின்பு நறுக்கின பச்சைமிளகாய், தூனா மீனை சேர்த்து வதக்கி மிளகுத்தூளைத் தவிர மற்ற அனைத்து தூள்களையும் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
வேகவைத்த காய்கறிகளை போட்டு நன்கு கிளறி மசாலா அனைத்தும் காய்கறியில் சேரும் வரை பிரட்டி விடவும்.
கடைசியாக மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்கவும். ஒரு பாத்திரத்தில் போட்டு ஆறியதும் கைகளால் நன்கு பிசைந்துக்கொள்ளவும்.
ஒரு நான்-ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, கரைத்த மாவில் இருந்து ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து ஊற்றி தவா முழுவதும் பரவும்படி மாவை நன்கு சுற்றி விடவும். தீயை மிதமானதாக வைக்கவும். மைதா ஆப்பம் போல் வெந்ததும் தானாகவே கழன்று வந்துவிடும்.
எல்லா மாவையும் இதே போல ஆப்பங்களாக சுட்டு எடுக்கவும். பின்னர் சுட்டுவைத்த ஆப்பத்தை ஒவ்வொன்றாக எடுத்து அதன் ஓரத்தில் பிசைந்துவைத்த காய்கறி கலவையை வைத்து ரோல் போல் சுற்றி கொள்ளவும்.
இதனை அப்படியே தக்காளி சாஸ் உடன் பரிமாறவும். புளிப்பு தேவையென்றால் கடைசியில் மிளகுத்தூள் சேர்த்த பின்பு எழுமிச்சைபழத்தை பாதி பிழிந்து சேர்த்துக்கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இன்று எங்கள் வீட்டில் உங்களின் சமையல்தான்.சாப்பிட்ட பிறகு பதில் எழுதுக்கின்றேன்.நன்றி

ஹலோ டியர், தங்களின் இந்த சுவையான டின் ஃபிஷ் குறிப்பிற்க்கு மிகவும் நன்றி. தங்களின் குறிப்பைக் கண்டவுடன் செய்துப் பார்தேன். நான் எதிர் பார்த்ததை விட நன்றாக இருந்தது. ஆனால் தங்கள் மைதாவாவினால் செய்து காட்டியுள்ள சுருட்டை செய்யவில்லை, காரணம் ரெடி மேட் பிட்டாபிரட் குளிர் சாதனப் பெட்டியில் நிறைய்ய இருந்தது. அதை வெட்டி உள்ளில் பூரணத்தை வைத்து சாப்பிட்டோம். ரம்பை இலை மட்டும் மிஸ்ஸிங், அதன் மணம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.மற்றபடி எனக்கு தெரிந்த அளவில் மிகவும் சுவையாக இருந்தது.மற்றொரு நாளைக்கு மைதா ஆப்பமும் செய்து பார்க்க வேண்டுமென்று இருக்கின்றேன். லன்ச்சுக்கு ஏற்ற சத்தான குறிப்பு இது. தங்கள் கண்டுப்பிடிப்புகளை மேலும் எதிர்பார்க்கின்றேன். நன்றி.

உங்கள் வீட்டில் எனது சமயல் என்று சொல்லி இருக்கிறீர்கள் சந்தோஷம் சாப்பிட்ட பிறகு பதில் எழுதுகிறேன் என்று பதில் எழுதவில்லையே செய்து பார்த்தீர்களா எப்படி இருந்தது பதில் தரவும்.

டியர் மனோஹரி மேடம் அவர்களுக்கு நலமாக இருக்கிறீர்களா எனது குறிப்பை நீங்கள் செய்து பார்த்து நன்றாக இருந்தது என்று சொல்லியதை பார்த்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது சமயல் திலகமாகிய உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

தனியாக மைதா ஆப்பம் சுடலாம்.இது எனது குறிப்பில் மைதா ஆப்பம் (கோழி ஆப்பம்) என்ற பெயரில் கொடுத்து இருக்கிறேன்.மைதா ஆப்பம் சுடுவதாக இருந்தால் சுற்றிவர நெய் ஊற்றி சுட்டு,அதன் கூட மீன் அல்லது கறியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.இது ரோல் போல் சுற்றி உள்ளே பூரணம் வைத்ததால் நான் நெய் ஊற்றவில்லை.தனியாக மைதா ஆப்பம் மட்டும் சுட்டு அதனை கறி அல்லது மீன் உடன் சாப்பிட்டு பாருங்கள் அதன் சுவை அருமையாக இருக்கும்.
நன்றி.

Sorry,i went out so i couln't reply to you.i maked your food yesterday it was a realy delicious.the taste of pancake was realy good and also the stuffing nice combination with pandan(rambai)leaf.thank you for your recipe.