அவல் கார உப்புமா

தேதி: March 22, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் - 1/4 லிட்டர்,
புளி - சிறிது,
காய்ந்த மிளகாய் - 5,
கறிவேப்பிலை - 5,
துருவிய தேங்காய் - 1/4 மூடி,
பூண்டு - 2 பல்,
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

அவலை கழுவி, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
தேங்காய், மிளகாய், புளி, உப்பு, பூண்டு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
கறிவேப்பிலை சேர்த்து, ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.
ஊற வைத்த அவலுடன் அரைத்த விழுது, தேங்காய் எண்ணெய் சேர்த்து பிசறி சாப்பிடலாம்.


அடுப்பில் வைத்து சமைக்கவே வேண்டாம்.
பூண்டு வாசனைப் பிடிக்காதவர்கள் பூண்டை நீக்கி விடலாம்.

மேலும் சில குறிப்புகள்