கோஸ் புகாத்

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டைகோஸ் - 200 கிராம்
பச்சைமிளகாய் - 3
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மைதா மாவு - 1 கப்
டால்டா - 25 கிராம்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப


 

முட்டைகோஸை கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகை போட்டு கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு அரை நிமிடம் நன்றாக வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய கோஸை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.இதனுடன் உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்து சிறிது நேரம் கழித்து இறக்கவும்.
பின்பு மைதாவை சலித்து உப்பு, டால்டா, சமையல் சோடா எல்லாம் சேர்த்து கெட்டியாக பிசைந்து சப்பாத்தி பலகையில் சிறு சிறு உருண்டைகளாக வைத்து வட்டமாக தேய்த்து வைத்து கொள்ளவும்.
அதில் வெந்த கோஸை ஒரு கரண்டி வைத்து இரண்டாக மடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் போட்டு பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்