முட்டை சாப்ஸ்

தேதி: March 22, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 4,
பெரிய வெங்காயம் - 1,
பூண்டு - 4 பல்,
காய்ந்த மிளகாய் - 5,
தேங்காய் - 1/2 மூடி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.


 

தேங்காய், மஞ்சள் தூள், சீரகம், பூண்டு சேர்த்து நைசாக அரைக்கவும்.
முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு கலக்கவும் (அடிக்கக் கூடாது).
அதனுடன் அரைத்த விழுதில் பாதி, உப்பு சிறிது சேர்த்து கலக்கவும்.
எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி, 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
நன்கு ஆறியதும், 1 அங்குல துண்டுகளாக வெட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கிய பின் அரைத்த விழுதை உப்பு சேர்த்து வதக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து, கலக்கி, முட்டை துண்டுகளை அதில் போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.


புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹலோ செல்வி மேடம்,
உங்கள் முட்டை சாப்ஸ் செய்து பார்த்தேன்.காப்சிகிம் பாத் செய்து இதை சைடு டிஷாக செய்தேன்.taste நன்றாக இருந்தது ஆனால் gravyaaga இல்லாமல் தண்ணியஆகா இருந்தது. முட்டை எல்லா மசலவையும் இழுத்து கொண்டது போல...அப்படி தான் இருக்குமா? க்ரவ்யாக இருக்க என்ன செய்ய வேண்டும். Sugeestions pls.

ஹாய் குயின்,
நலமா? தேங்காய் அரைத்து ஊற்றிய பின் ரொம்ப நேரம் கொதிக்க வைத்தால் தேங்காய் திரிந்தது போல் ஆகிவிடும். முட்டை போட்டு ஒரு கொதி விட்டால் போதும். ரொம்ப ரேரம் விட்டாலும் அப்படித்தான் ஆகிவிடும். முட்டை குழம்பு கூட அப்படித்தான். ரொம்ப கொதித்தால் தண்ணி தனியாக வந்து விடும். முயற்சியுங்கள். அடுத்த முறை சரியாக வரும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அடுத்த முறை நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன்...உடனே பதில் அளித்தமைக்கு நன்றி

செல்வி மேடம் முட்டை சாப்ஸ் நன்றாக இருந்தது..
thanks medam.

அன்பு தனு,
பாராட்டுக்கு ரொம்ப நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.