சிக்கன் ரிச் குருமா

தேதி: March 22, 2007

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழிக்கறி - 3/4 கிலோ,
பெரிய வெங்காயம் - 3,
பச்சை மிளகாய் - 3,
இஞ்சி - 1 அங்குல துண்டு,
பூண்டு - 8 பல்,
பாதாம் - 8,
பிஸ்தா - 8,
தயிர் - 1 கப்,
கோவா - 1/2 கப் (சர்க்கரையில்லாதது),
மிளகு தூள் - 1 தேக்கரண்டி,
ஃப்ரஷ் க்ரீம் - 1/4 கப்,
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 4 ஸ்பூன்.


 

கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி, சுத்தம் செய்யவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பாதாம், பிஸ்தாவை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தோல் உரித்து, நைசாக அரைக்கவும்.
தயிரை 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கிய பின், கோழித்துண்டுகள், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் அரைத்த விழுது போட்டு வதக்கவும்.
கோவாவை 1 கப் வெந்நீரில் கரைத்து, பாதாம், பிஸ்தா அரைத்த கலவையுடன் சேர்த்து ஊற்றி கொதிக்க விடவும்.
10 நிமிடம் கொதித்த பின், உப்பு, மிளகு தூள், கலக்கிய தயிர் சேர்த்து கொதிக்க விடவும்.
சிக்கன் வெந்தவுடன் க்ரீம், ஏலக்காய் தூள் சேர்த்து, 2 நிமிடம் விட்டு இறக்கவும்.


அடிக்கடி கிளறி விட வேண்டும். புலாவ், பரோட்டாவிற்கு சுவையான சைடுடிஷ். விருந்துகளில் பரிமாற ரிச்சாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

செல்வி மேடம் உங்களின் குறிப்பின்படி ரிச் குருமா செய்தேன்.நன்றாக வந்தது.ஆனால் நீங்க சொன்ன மாதிரி புலாவோ பரோட்டாவோ செய்யலை உங்களோட சிக்கன் கைமா ரொட்டி செய்தேன் அதர்கும் மேட்சிங்காதான் இருந்தது.தேங்ஸ் மேடம்.

அன்பு மோனி,
பாராட்டுக்கு நன்றி. இது ரொம்ப ஸ்பெஷலான குறிப்பாச்சே. இந்த குருமா எதனோடையும் பொருந்தும். உங்க வசதி தான். எப்படி வேணும்னாலும் சாப்பிடலாம். உங்க ஹஸ்ஸ நினைச்சா பாவமா இருக்கு. ஒரே நாளிலேயே இத்தன குறிப்பை செஞ்சு சோதிச்சிட்டீங்க :-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.