அவசர மோர்குழம்பு

தேதி: March 22, 2007

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மோர் - 4 கப்
இஞ்சி - சிறு துண்டு
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
கல் உப்பு - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 1/2 மேசைக்கரண்டி
தண்ணீர் - இரண்டரை கப்
கொத்தமல்லித்தழை


 

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு தாளிக்கவும்
உப்பு சேர்த்து மோரை கலக்கி அதில் ஊற்றி உடனே அடுப்பை அணைக்கவும்
கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்


அதில் ஊற்றி உடனே அடுப்பை அணைக்கவும் அணைக்காவிட்டால் மோர் திரிந்துவிடும்

மேலும் சில குறிப்புகள்