ஆரஞ்சு பாசந்தி

தேதி: March 24, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆரஞ்சு - 6,
பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 1 1/2 டம்ளர்,
ஏலக்காய் - 5,
பாதாம் - 5,
பிஸ்தா - 5,
எசன்ஸ் - சிறிது,


 

பாலை பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைக்கவும்.
பிறகு அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
ஆரஞ்சை உரித்து, தோல், கொட்டை நீக்கி, சுளைகளை பாலில் போடவும்.
எசன்ஸ் விட்டு, பாதாம், பிஸ்தா சேர்க்கவும்.
ஏலக்காயை தூளாக்கி சேர்த்து இறக்கவும்.
ஆறிய பின் ஃப்ரிஜில் வைத்து, குளிர்ந்த பின் எடுத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

பால் திரிஞ்சிடாதா, மேடம்?