பீர்க்கங்காய் கொத்சு

தேதி: March 25, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீர்க்கங்காய் - 1,
பச்சை மிளகாய் - 2,
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு,
சின்ன வெங்காயம் - 5,
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 1 ஸ்பூன்.


 

பீர்க்கங்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பீர்க்கங்காயை உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் சேர்த்து வேக வைக்கவும்.
பீர்க்கங்காய் வெந்தவுடன் மத்தால் நன்றாக மசித்து கொள்ளவும்.
புளியை கரைத்து, வடிகட்டி, சாம்பார் பொடி சேர்த்து மசித்த பீர்க்கங்காயுடன் கொதிக்க விடவும்.
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்