ப்ரட் உப்புமா

தேதி: March 25, 2007

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பிரட் ஸ்லைஸ் - 10,
கேரட் - 1,
பீன்ஸ் - 2,
பச்சை பட்டாணி - 3,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி - சிறிது,
கடுகு - 1/2 தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.


 

கேரட், பீன்ஸை மிகவும் சன்னமாக, நீளமாக நறுக்கி வைக்கவும்.
பட்டாணியை தோல் உரித்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
ப்ரட்டை உதிர்த்து, உப்பை சிறிது தண்ணீரில் கரைத்து, புட்டு மாவுக்கு தெளிப்பது போல் கலந்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, உதிர்த்த ப்ரட்டை சேர்த்து கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்