ஓட்ஸ் காய்கறி சூப்

தேதி: March 25, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

அறுசுவை கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் வழங்கி வரும் <a href="experts/1786" target="_blank"> திருமதி. ஹவ்வா அலியார் </a> அவர்களின் தயாரிப்பு இந்த ஓட்ஸ் காய்கறி சூப். செய்வதற்கு மிகவும் எளிதானது. உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.

 

ஓட்ஸ் - ஒரு ௧ப்
பச்சைப்பட்டாணி - 5 மேசைக்கரண்டி
மக்காச்சோளம் – 3 மேசைக்கரண்டி
காரட் – 1
பச்சை மிளகாய் – 1
சின்ன வெங்காயம் – 5
தக்காளி – 2
மஞ்சள் பொடி – அரைத் தேக்கரண்டி
எலுமிச்சைரசம் - ஒரு மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - அரைத் தேக்கரண்டி
சீரகத் தூள் - அரைத் தேக்கரண்டி
உப்புத்தூள் - அரைத் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – மூன்று கொத்து
மல்லி இலை – இரண்டு டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 ௧ப்


 

தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
காரட்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களை தயாராய் வைத்துக்கொள்ளவும்.
நறுக்கின காய்கறி, ஓட்ஸ், மிளகாய் அனைத்தையும் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
பின்னர் திறந்து சீரகத்தூள், உப்பு, மல்லி இலை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சிறிது நறுக்கின வெங்காயம் போட்டு தாளித்து கொதிக்கும் சூப்பில் கொட்டவும்.
இறக்கும்போது எலுமிச்சைரசம் ஊற்றிப் பரிமாறவும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

I tried your oats veg soup.It came very good.Thanks for your recipe.

i tried your soup . it came out very well and taste be very good.easy and healthy.

sifa

ithanai breakfast rku saapida mudiyuma or just starteraha thaan use panna mudiyuma. pls clarify.
entrum anbudan

entrum anbudan